உள்ளடக்கத்துக்குச் செல்

சத்ரஞ்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரசீகப் புலவர் பெர்தோவ்சி என்பவர் கிபி 1000 ஆவது ஆண்டளவில் எழுதிய மிகப்பெரிய தொகைநூலான சா நாமாவில் சித்தரிக்கப்பட்டுள்ள சத்ரஞ்ச் விளையாடும் இருவர்

சத்ரஞ்ச் (Shatranj) என்பது சாசானியப் பேரரசில் விளையாடப்பட்ட சதுரங்கத்தின் பழைய வடிவமாகும். இதன் தோற்றம் இந்திய விளையாட்டான சதுரங்கத்தில் இருந்து மாற்றம் பெற்று உள்ளது.[1] நவீன சதுரங்கம் இந்த விளையாட்டிலிருந்து உருவானது. 10 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பில் இருந்த எசுப்பானியா மற்றும் சிசிலியில் ஏற்பட்ட தொடர்புகள் மூலம் ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதால், நவீன சதுரங்கம் இந்த விளையாட்டிலிருந்து படிப்படியாக வளர்ந்தது. நவீன பாரசீக மொழியில், இந்தச் சொல் சதுரங்கம் என்பதன் மொழிபெயர்ப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2]

சொற்பிறப்பியல்

[தொகு]

பாரசீக வார்த்தையான 'ஷத்ரஞ்ச்' என்பது, சமசுகிருதத்தில் அதே பெயரைக் கொண்ட 'சதுரங்கம்' என்ற விளையாட்டைக் குறிக்கும் சொல்லிலிருந்து உருவானது. இடைக்கால பாரசீகத்தில், இந்த வார்த்தை 'சத்ரங்' எனத் தோன்றுகிறது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'மாதயான் ஈ சத்ரங்' ("சதுரங்க நூல்") என்ற நூலின் தலைப்பில் இது காணப்படுகிறது.

வரலாறு

[தொகு]
14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீகக் கையெழுத்துப் பிரதி, இந்தியாவிலிருந்து வந்த ஒரு தூதர் பாரசீக அரசவைக்கு சதுரங்கத்தைக் கொண்டு வந்ததை விவரிக்கிறது.
கன்னோசியின் மௌகரி மன்னர் சர்வவர்மனால் அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இந்தியத் தூதர், முதலாம் கோஸ்ரோவின் பாரசீக அரசவையில் சதுரங்கத்தை அறிமுகப்படுத்துகிறார். [3][4]

அருகிலுள்ள நாடுகளில் விளையாட்டின் பெயர் 'சதுரங்கா'என்பதிலிருந்து பெறப்பட்டதாகத் தெரிகிறது-பாரசீக மொழியில் சத்ரங், அரபு மொழியில் ஷத்ரஞ்ச், திபெத்திய மொழியில் சந்தேரகி ஆகியவை இதற்கு சில உதாரணங்கள். இது இந்த விளையாட்டும் அதன் பெயரும் இந்தியாவிலிருந்து வந்ததை உணர்த்துகிறது. மேலும், இந்தியாவிலிருந்து பாரசீகத்திற்கு இந்த விளையாட்டு வந்ததாக நம்பப்பட்டது.[5]

பிற்கால சாசானிய மன்னர் முதலாம் கோஸ்ராவின் (531–579) ஆட்சியின் போது, பதினாறு மரகதம் மற்றும் பதினாறு மாணிக்கம் உள்ளடக்கிய சதுரங்ப் பலகையை [6] பரிசாக ​​ஒரு இந்திய மன்னர் (கன்னோசியின் மௌகரி வம்சத்தின் மன்னராக இருக்கலாம்.[7]) வழங்கியதாகத் தெரிகிறது. அந்த விளையாட்டில் இருந்த ஒரு சவாலை கோஸ்ராவின் அரசவையினர் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தனர். முதலில் மாதயான் ஈ சத்ரங்கில் (சுமார் கி.பி. 620) குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் சம்பவம், பிர்தௌசியின் சாநாமாவிலும் (சுமார் கி.பி. 1010) குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவல்

[தொகு]

இஸ்லாத்தின் பரவலுடன், சதுரங்கம் மக்ரிபு பகுதிக்கும் பின்னர் அந்தலூசிய எசுப்பானியாவிற்கும் பரவியது. இந்தியாவின் மீதான இஸ்லாமியப் படையெடுப்பின் போது (சுமார் 12 ஆம் நூற்றாண்டு), அதன் சில வடிவங்கள் இந்தியாவிற்கும் திரும்பி வந்தன.

அடுத்த நூற்றாண்டுகளில், சதுரங்கம் ஐரோப்பாவில் பிரபலமடைந்தது. இறுதியில் நவீன சதுரங்கத்திற்கு வழிவகுத்தது.[8]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jean-Louis Cazaux (2012-04-20). "Shatranj". History.chess.free.fr. Retrieved 2013-11-23.
  2. "شطرنج، دیکشنری آبادیس" (in பெர்ஷியன்).
  3. Eder, Manfred A. J. (2010). South Asian Archaeology 2007 Proceedings of the 19th Meeting of the European Association of South Asian Archaeology in Ravenna, Italy, July 2007, Volume II (PDF). Archaeopress Archaeology. p. 69. ISBN 978-1-4073-0674-2. Archived (PDF) from the original on 2016-04-14.
  4. Bakker, Hans T. (2017). The Huns in Central and South Asia. How Two Centuries of War against Nomadic Invaders from the Steps are Concluded by a Game of Chess between the Kings of India and Iran.
  5. "The name of the game in adjoining countries appears to be derived from chaturanga – chatrang in Persian, shatranj in Arabic, chanderaki in Tibetan are examples. This suggests that the game, as well as its name, came from India. Also, as will appear, it was believed in Persia that the game arrived there from India."Ancient board games in perspective : papers from the 1990 British Museum colloquium, with additional contributions. London: British Museum Press. 2007. p. 18. ISBN 978-0-7141-1153-7.
  6. Murray 1913.
  7. Jean-Louis Cazaux (12 March 2004). "The Enigma of Chess birth: The Old Texts: 6th, 7th and 8th centuries". Retrieved 14 July 2007.
  8. Averbakh, Yuri (2012). "Western Europe". A History of Chess: From Chaturanga to the Present Day. Russell Enterprises. ISBN 978-1936490448. unlike in the Middle East, where the rules of [shatranj] did not change much, in Europe, they were not regarded as something permanent, and this attitude eventually led to the reform of the game.

நூலாதாரங்கள்

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ரஞ்ச்&oldid=4576322" இலிருந்து மீள்விக்கப்பட்டது