சத்ய பால்
நிறுவுகை | 1985 |
---|---|
நிறுவனர்(கள்) | சத்ய பால் |
தலைமையகம் | குர்கான் , அரியானா, இந்தியா |
முதன்மை நபர்கள் | சத்ய பால் புனீத் நந்தா சஞ்சய் கபூர் |
தொழில்துறை | புதுப்பாணி |
உற்பத்திகள் | ஆடம்பர, அழகு உடைகள் |
உரிமையாளர்கள் | ஜெனீசுசு கலர்சு தனியார் நிறுவனம் |
சத்ய பால் (Satya Paul) என்பது 1 ஏப்ரல் 1985-இல் நிறுவப்பட்ட இந்திய அச்சுகளுக்கு அறியப்பட்ட இந்திய வடிவமைப்பாளர் முத்திரை ஆகும். இந்த வணிக சின்னம் இப்போது இந்தியா முழுவதும் உள்ளது. இது வடிவமைப்பாளர் சத்ய பால் என்பவரால் நிறுவப்பட்டது. சஞ்சய் கபூர் (நிறுவனர் - ஜெனிசிசு சொகுசு) மற்றும் பாலின் மகன் புனித் நந்தா (2010 வரை சத்யா பால் கிரியேட்டிவ் இயக்குநர்) ஆகியோரால் இயக்கப்பட்டது.[1][2][3][4]
இந்த முத்திரையின் நிறுவனர் சத்ய பால், சனவரி 6, 2021 அன்று கோவையில் காலமானார்.[5]
தயாரிப்புகள்
[தொகு]சத்ய பால் தயாரிப்பு வரிசையில் பெண்களுக்கான வடிவமைப்பு உடைகள் பெரும்பாலும் புடவைகள், குர்தாக்கள், கைப்பைகள், தாவணிகள் மற்றும் கழுத்துப் பட்டை, இடிப்பு பட்டை, பணப்பைபோன்ற ஆண்களுக்கான அணிகலன்களும் உள்ளன. [6] [7]
வடிவமைப்பு ஒத்துழைப்பு
[தொகு]மார்பகப் புற்றுநோய்க்கான திங்க் பிங்க்-விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக மும்பையின் டாட்டா நினைவு மைய மருத்துவமனையுடன் பெண்கள் புற்றுநோய் முன்முயற்சிக்காக சத்ய பால் கைகோர்த்தார்.[8] மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடி உயிர் பிழைத்த மும்பை சமூகவாதியும், பரோபகாரருமான தேவிகா போஜ்வானியின் சிந்தனையில் உருவானது இந்தத் திட்டம். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பெண்களின் வலிமையையும் போராட்டத்தையும் குறிக்கும் வகையில் 'ரே ஆப் ஹோப்' என்ற சிறப்புத் திட்டத்துடன் உருவாக்கப்பட்டது.
2006-இல், இந்த வணிக முத்திரை உலக வன நிதியத்துடன் இணைந்து அழிந்து வரும் உயிரினங்களின் சேகரிப்பை அறிமுகப்படுத்தியது.[9]
2003ஆம் ஆண்டில், சத்ய பால் சையது ஐதர் ராசாவின் நான்கு ஓவியங்களை உருமாற்றம் செய்து வரையறுக்கப்பட்ட பதிப்பு பட்டுத் துணிகளில் மீண்டும் உருவாக்கினார்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paul Mall". Supriya Dravid. 2010-02-02. Retrieved 2012-05-21.
- ↑ "Puneet Nanda to take a break". Fashion United. 2011-02-28. Retrieved 2011-02-28.
- ↑ "Puneet Nanda". VIVIENNE KENRICK. 2005-08-06. Retrieved 2005-08-06.
- ↑ "Genesis Colors: Success Beyond Satya Paul". PRINCE MATHEWS THOMAS. 2013-09-02. Retrieved 2014-08-24.
- ↑ "Renowned designer Satya Paul passes away at 79". Mumbai Live. Retrieved 7 January 2021.
- ↑ Satya Paul Sarees, snapdeal.com, retrieved 2013-09-03
- ↑ Clothing & Accessories - Satya Paul, amazon.in, retrieved 2004-10-26
- ↑ "Think PINK-Satya Paul", The Times of India, retrieved 2004-10-26
- ↑ WWF AND Satya Paul, fashionunited.in, retrieved 2012-10-26
- ↑ Exploring Raza's World in all its vibrant colours, Asmita Aggarwal - Hindustan Times, 2003-02-07, retrieved 2003-02-07
- ↑ Satya Paul presents Satya Paul Raza Scarves, India Infoline News Service, 2010-06-23, retrieved 2010-06-23