உள்ளடக்கத்துக்குச் செல்

சத்யா (1998 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யா
இயக்கம்ராம் கோபால் வர்மா
தயாரிப்புராம் கோபால் வர்மா
பாரத் ஷா (வெளியீடு)
கதை
இசை
நடிப்பு
ஒளிப்பதிவு
  • ஜெரார்ட் ஹூப்பர்
  • மஸ்ஹர் கம்ரான்
படத்தொகுப்பு
  • அபூர்வா அசுரானி
  • பானோதயா
வெளியீடு3 சூலை 1998 (1998-07-03)
ஓட்டம்167 நிமிடங்கள் [1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு₹2.5 கோடிகள்[2]
மொத்த வருவாய்மதிப்பீடு ₹15 கோடிகள்[2][3]

சத்யா (Satya) என்பது 1998ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழிக் குற்றத் திரைப்படம் ஆகும். இதனை ராம் கோபால் வர்மா தயாரித்து இயக்கியுள்ளார். சௌரப் சுக்லா, அனுராக் காஷ்யப் ஆகியோர் திரைக்கதையை எழுதியுள்ளனர். இதில் ஜே. டி. சக்ரவர்த்தி, ஊர்மிளா மடோண்கர், மனோஜ் பாஜ்பயீ ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சௌரப் சுக்லா, ஆதித்யா ஸ்ரீவஸ்தவா மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் பாடல்களுக்கான இசையை விசால் பரத்வாஜும் பின்னணி இசையை சந்தீப் சௌதாவும் அமைத்தனர். பாடல்களை குல்சார் எழுதினார். தொடக்கத்தில் ஒளிப்பதிவை ஜெரார்ட் ஹூப்பர் மேற்கொண்டார், பின்னர் அவருக்குப் பதிலாக மசுகர் கம்ரான் பணியாற்றினார். சுமார் 2.5 கோடி ரூபாய் செலவில் இத்திரைப்படம் மும்பையில் படமாக்கப்பட்டது.[2]

இத்திரைப்படம் ஆறு பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஒரு தேசியத் திரைப்பட விருது பெற்றது. காலப்போக்கில் சத்யா ஒரு வழிபாட்டு மரபுத் திரைப்படம் என்ற நிலையை அடைந்து, இந்தியத் திரைப்பட வரலாற்றில் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாலிவுட்டில் கொள்ளயர்கள் அடிப்படையிலான திரைப்படங்களுக்கான அடித்தளத்தை அமைத்த படமாகவும் இது கருதப்படுகிறது. இதன் தாக்கத்தால் கம்பெனி (2002), டி (2005) போன்ற திரைப்படங்களும், நேரடித் தொடர்ச்சியாக சத்யா 2 (2013) திரைப்படமும் உருவாக்கப்பட்டன.

கதைச்சுருக்கம்

[தொகு]

வேலை தேடி மும்பைக்கு வரும் சத்யா என்ற இளைஞன், சிறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கு பிக்கு மாத்ரே என்ற உள்ளூர் கும்பல் தலைவனுடன் நட்பு ஏற்படுகிறது. சிறையிலிருந்து வெளியேறிய பிறகு சத்யா, பிக்குவின் குற்றக் கும்பலில் சேர்ந்து மும்பை கொள்ளையர் உலகில் குறிப்பிடத்தகுந்த நபராக ஆகிறார். இதற்கிடையில் வித்யா என்ற பாடகியை காதலிக்கிறான். கும்பல் மோதல்கள், அரசியல் தொடர்புகள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் தீவிரமடையும்போது சத்யாவின் வாழ்க்கை சிக்கலாகிறது. பிக்குவின் மரணத்திற்குப் பிறகு சத்யா தனிமைப்படுத்தப்படுகிறான். இறுதியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவதுடன், அவனது காதலும் குற்ற உலக வாழ்க்கையும் துயரமான முடிவை அடைகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Satya (1998)". British Board of Film Classification. Archived from the original on 3 December 2017. Retrieved 2 December 2017.
  2. 1 2 3 Sharma, Sanjukta (13 January 2017). "A flashback to 'Satya'". மின்ட் இம் மூலத்தில் இருந்து 3 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171003025641/http://www.livemint.com/Leisure/Rhgi5fhHOnq9ziE7btbYZO/A-flashback-to-Satya.html.
  3. "Satya". Box Office India. Archived from the original on 2 August 2015. Retrieved 22 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யா_(1998_திரைப்படம்)&oldid=4588378" இலிருந்து மீள்விக்கப்பட்டது