சத்யா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யா
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
எழுத்துஎன். ரமண கோபிநாத்
ஆர். டிராமலிங்கம்
திரைக்கதைலோபோ சாமி
ஜி.சபரிநாதன்
இயக்கம்
  • அருண் (1-51)
  • சுதர்சன் (52-90)
  • கார்த்திக் (91-210)
  • நடராஜன் (211-768)
நடிப்பு
இசைசேகர் சாயி பரத்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்768
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஆர்.கே. மனோகர்
ஒளிப்பதிவுஅர்ஜுனன் கார்த்திக்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ராஜம்மாள் படைப்புகள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்4 மார்ச்சு 2019 (2019-03-04) –
24 அக்டோபர் 2021 (2021-10-24)
Chronology
தொடர்புடைய தொடர்கள்சிந்துரா பிந்து

சத்யா என்பது 2019 முதல் 2021 வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது 'சிந்துரா பிந்து' என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[1]

இந்த பருவத்தில் ஆயிஷா மற்றும் விஷ்ணு ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2] இது ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிந்துரா பிந்து' என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[3] இந்த தொடர் ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாகக் கொண்டது ஆகும். இந்த தொடர் 4 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி, 24 அக்டோபர் 2021 அன்று 768 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

இந்த தொடரின் இரண்டாம் பருவம் சத்யா 2 என்ற பெயரில் அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஒரே உருவ ஒன்றமையில் உள்ள சத்யா, நித்தியா ஆகியோரையும் சத்யாவின் முன்னாள் கணவன் பிரபுவை சுற்றி கதை நகர்கிறது.

தொடரின் பருவங்கள்[தொகு]

பகுதிகள் அத்யாயங்கள் முதலில் ஒளிபரப்பப்பட்டது
முதலில் ஒளிபரப்பப்பட்டது கடைசியாக ஒளிபரப்பப்பட்டது
1 768 23 ஏப்ரல் 2018 (2018-04-23) 4 மார்ச்சு 2019 (2019-03-04)
2 25 அக்டோபர் 2021 (2021-10-25) -

கதைச்சுருக்கம்[தொகு]

சத்யா என்ற பெண் தனது வாழ்க்கையை ஆண் இயல்பு கொண்ட பெண்ணாக வாழ்கிறாள். அவர் தனது அம்மா, பாட்டி மற்றும் மூத்த சகோதரி திவ்யா உடன் வசிக்கிறார். சத்யா, ஆண் தோழர்களுடன் ஒட்டிக்கொண்டார்.

எதிர்பாராத சூழ்நிலையில், அவள் ஒரு பணக்காரனான பிரபு மீது காதல் மலர்கிறது. ஆயினும்கூட, பிரபு திவ்யாவின் கணவராக மணம் முடிகிறார், இறுதியில் பிரபு சத்யாவை திருமணம் செய்து கொள்கிறார்.

நடிகர்கள்[தொகு]

முக்கிய கதாபாத்திரங்கள்[தொகு]

பிரபு குடும்பத்தினர்[தொகு]

  • யுவஸ்ரீ - இந்துமதி, விக்னேஷ்; அனிதா மற்றும் பிரபுவின் தாய்
  • ராஜசேகர் (2019) → பிரபாகரன் (2019-2021) - சண்முகசுந்தரம்; விக்னேஷ், அனிதா மற்றும் பிரபுவின் தந்தை
  • ஜானகி (2019-2020) → ரம்யா ஜோசப் (2020-2021) - கவிதா; விக்னேஷின் மனைவி
  • நேசன் - விக்னேஷ்; சண்முகசுந்தரத்தின் மகன்
  • சாலினி சுந்தர் (2019) → ப்ரீத்தி (2019-2020) → சந்தியா (2020-2021) - சௌம்யா; சதாசிவத்தின் மகள்
  • ஸ்ரீவித்யா நடராஜன் - அனிதா; சண்முகசுந்தரத்தின் மகள்
  • பாண்டி ரவி (2019-2020) → புரளி திலீபன் (2020-2021) - வீரசிங்கம்; அனிதாவின் கணவன்
  • விசாலாட்சி மணிகண்டன் - நிர்மலா சதாசிவம்
  • பரதன் சிவா (2019-2020) → ரவி சங்கர் (2020-2021) - சதாசிவம்; சண்முகசுந்தரத்தின் தம்பி

சத்யா குடும்பத்தினர்[தொகு]

  • கோலி ரம்யா (2019-2020) - திவ்யா; சத்யாவின் அக்கா
  • சந்தோஷ் - கதிர்; சத்யாவின் உடன் பிறவா தம்பி
  • சீதா அனில் (எ) யாஸ்மின் - ஜானகிதேவி; திவ்யா மற்றும் சத்யாவின் தாய்
  • லக்ஷ்மி பிரியா - சுப்புலட்சுமி; ஜானகிதேவியின் மாமியார்
  • ராஜ்காந்த் - வடிவேலு; திவ்யா மற்றும் சத்யாவின் தந்தை (தொடரில் இறந்துவிட்டார்)

துணை கதாபாத்திரங்கள்[தொகு]

  • இந்திரன் - குள்ளபூதம், பிரபுவின் நண்பர்

முந்தைய கதாபாத்திரம்[தொகு]

  • கோலி ரம்யா (2019-2020) - திவ்யா; சத்யாவின் அக்கா
  • யோகேஷ்வரன் (2019-2020) - பாலா; திவ்யாவின் காதலன்

நடிகர்களின் தேர்வு[தொகு]

இத்தொடரில் சின்னத்திரை நடிகர்கள் ஆயிஷா மற்றும் விஷ்ணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.[5] 2 வது ஜீ தமிழ் குடும்ப விருதுகளில் சிறந்த தொடருக்கான விருதை பெற்றுள்ளது.

நேர அட்டவணை[தொகு]

இந்த தொடர் ஆரம்பத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, பின்னர் தினமும் 10 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் சர்வைவர் தமிழ் 1 நிகழ்ச்சிக்காக, 12 ஜூலை 2021 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, 18 அக்டோபர் 2021 முதல் மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம்
18 அக்டோபர் 2021 - 24 அக்டோபர் 2021
திங்கள் - சனி
18:30
12 ஜூலை 2021 - 16 அக்டோபர் 2021
திங்கள் - சனி
20:00
4 மார்ச்சு 2019 - 11 ஜூலை 2021
தினமும்
22:00

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2019 7.8% 8.2%
2020 6.5% 7.8%
5.3% 6.7%
2021 3.2% 5.2%
2.5% 3.5%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'சத்யா' தொடர் விஷ்ணு மற்றும் ஆயிஷா". Thehindu.com.
  2. "Sathya: TV actress Ayesha to play a tomboy - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  3. "'சத்யா' தொடர் விஷ்ணு மற்றும் ஆயிஷா". Thehindu.com.
  4. "பார்பி டால் போல குட்டை பாவாடையில் சத்யா சீரியல் நடிகை கொடுத்த போஸ்". Tamil.behindtalkies.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-05.
  5. "ஆணாக நடிக்கும் ஆயிஷா" (in ta). cinema.dinamalar.com. https://cinema.dinamalar.com/tamil-tv-serials/75400/Chinna-thirai-Television-News/aysha-to-act-as-men-role.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் திங்கள்-சனி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சத்யா அடுத்த நிகழ்ச்சி
யாரடி நீ மோகினி அன்பே சிவம்
ஜீ தமிழ் திங்கள்-சனி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சத்யா அடுத்த நிகழ்ச்சி
றெக்கை கட்டி பறக்குது மனசு யாரடி நீ மோகினி