சத்யா ராணி சாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்யா ராணி சாதா (Satya Rani Chadha) (1929 கே. - ஜூலை 1, 2014) ஒரு பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். 1980 களில் சக ஆர்வலரான ஷாஜஹான் அபாவுடன் இணைந்து இந்தியாவில் வரதட்சணை எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியதற்காக அறியப்பட்டவர். இந்த இரு பெண்களும் வரதட்சணை தகராறுகளின் விளைவாக தங்கள் மகள்களை இழந்த தாய்மார்கள் ஆவார்கள், மேலும், இவர்கள் பல தசாப்தங்களாக நீதிக்காகவும் இந்தியாவில் வரதட்சணை நடைமுறைகளை மாற்றவும் பிரச்சாரம் செய்தனர். [1] [2] இவர்கள் இருவரும் இணைந்து சக்தி ஷாலினி என்ற டெல்லியை தளமாகக் கொண்ட புகலிடம் மற்றும் பெண்கள் உரிமைகள் அமைப்பை நிறுவினர். மேலும், வரதட்சணை தொடர்பான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்து போராடினர். [3] இதில், சத்யா ராணி சாதா நீர்ஜா பானோட் விருதைப் பெற்றவர் ஆவார். [4] [5] [6] [7] [8]

சசிபாலாவை கொன்று நீதிக்கான போராட்டம்[தொகு]

1979 ஆம் ஆண்டில், சத்ய ராணி சாதாவின் இருபது வயது மகள், சசி பாலா (காஞ்சன்பாலா என்றும் அழைக்கப்படுகிறார்), மணமகள் எரிப்பு விவகாரத்தில் சிக்கி வீட்டில் இருந்தபோது கடுமையான தீக்காயங்களால் இறந்தார். அவர் திருமணமாகி ஒரு வருடத்திற்கும் குறைவாகவே இருந்தார். மேலும் இறக்கும் போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. [9] ஸ்கூட்டர், தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனப்பெட்டி போன்ற கோரிக்கைகள் அடங்கிய முழு வரதட்சணைக் கோரிக்கையையும் தனது மகளின் கணவரின் குடும்பத்திற்கு கொடுக்க சத்ய ராணி சாதாவால் முடியவில்லை. ஆனாலும், சத்யா சமாளித்தபடி தொலைக்காட்சிக்கு பணம் செலுத்தி குளிர்சாதனப் பெட்டியைக் கொடுத்தார். அப்படியிருந்தும், இவரது மகள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சத்யாவின் மருமகன் சுபாஷ் சந்திரா, மீதமுள்ள வரதட்சணைக்கான (ஸ்கூட்டர்) கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். மருமகன், தனது மகளின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர் இல்லை என்றாலும், வரதட்சணைக் கோரிக்கையின் ஒரு பகுதி நிறைவேறாததால் தனது மகள் கொல்லப்பட்டதாக சந்தேகித்து, சத்யா மரணத்தை கொலை என்று தெரிவித்தார். [10] [11]

அடிப்படை ஆதாரங்களை சேகரிப்பதில் போலீசார் அலட்சியம் காட்டி, மருமகன் சுபாஷ் சந்திரா மீது கொலைக் குற்றம் சுமத்தாமல், வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது 1980 இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வழிவகுத்தது, சுபாஷ் சந்திராவின் ஸ்கூட்டர் கோரிக்கை திருமணமாகி பத்து மாதங்களுக்குப் பிறகு வந்ததால், அதை மரணத்துடன் இணைக்க முடியாது போனது. சத்யா கொலை வழக்கைத் தொடர்ந்தார், ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர 2000 ஆண்டு வரை ஆனது. சுபாஷ் சந்திரா 2000 ஆம் ஆண்டில் தற்கொலைக்குத் தூண்டியதாகக் குறைந்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார். மேல்முறையீட்டில் அவரது தண்டனை 2013 இல் உறுதி செய்யப்பட்டது, மேலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், சுபாஷ் சந்திரா தன்னை ஒப்படைக்கத் தவறிவிட்டார். மேலும், தண்டனையை அனுபவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. [12]

சான்றுகள்[தொகு]

  1. "Remembering Satya Rani Chadha: The Face Of India's Anti-Dowry Movement - ANOKHI MEDIA". ANOKHI MEDIA. 2014-07-14. https://www.anokhimedia.com/remembering-satya-rani-chadha-the-face-of-indias-anti-dowry-movement/. பார்த்த நாள்: 2018-05-25. 
  2. "Satya Rani Chadha: The face of India's anti-dowry movement". Namita Bhandare. Livemint. 2 July 2014. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  3. "Celebrating Women Who Fought The Much Needed Fight Against Dowry". sheroes.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-25.
  4. "Battle won for daughter in 34-yr dowry fight". Abantika Ghosh. Indian Express. 18 May 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  5. Women, Security, South Asia: A Clearing in the Thicket. SAGE Publications. 3 October 2005. https://books.google.com/books?id=G4oDbma2Y0MC&pg=PA37. பார்த்த நாள்: 24 May 2018. 
  6. Nine Degrees of Justice: New Perspectives on Violence against Women in India. Zubaan. 31 December 2012. https://books.google.com/books?id=hwanDAAAQBAJ&pg=PT32. பார்த்த நாள்: 24 May 2018. 
  7. Struggle for Gender Justice: Justice Sunanda Bhandare Memorial Lectures. Penguin Books India. https://books.google.com/books?id=TSmZY__8QX8C&pg=PA25. பார்த்த நாள்: 24 May 2018. 
  8. Empowerment of Women for Promoting Health and Quality of Life. Oxford University Press. 18 May 2018. https://books.google.com/books?id=ahJbDwAAQBAJ&pg=PT243. பார்த்த நாள்: 24 May 2018. 
  9. "After 34 years, a measure of justice in India". https://www.theglobeandmail.com/news/world/after-34-years-a-measure-of-justice-in-india/article11729701/. பார்த்த நாள்: 2018-05-25. 
  10. "After 34 years, a measure of justice in India". STEPHANIE NOLEN. The Globe and Mail. 6 May 2013. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  11. "Delhi High Court Subhash Chandra vs State on 7 March, 2013". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
  12. "After 34 years, a measure of justice in India". https://www.theglobeandmail.com/news/world/after-34-years-a-measure-of-justice-in-india/article11729701/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யா_ராணி_சாதா&oldid=3673192" இலிருந்து மீள்விக்கப்பட்டது