சாகித்தியா செகந்நாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சத்யா ஜெகன்னாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாகித்தியா செகந்நாதன்
பிறப்பு11 சூலை 1989 (1989-07-11) (அகவை 34)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
கல்விஎம்ஓபி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை
பணிநடிகை, விளையாட்டு தொகுப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவர், கட்டுரையாளர், விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012 முதல் தற்போது வரை
சொந்த ஊர்சென்னை

சாகித்தியா செகந்நாதன் (Sahithya Jagannathan) இவர் ஒரு நடிகை, விளையாட்டு தொகுப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவர், கட்டுரையாளர், விளம்பர நடிகை மற்றும் 2009இல் விவெல் மிஸ் சென்னை அழகு அலங்கார அணிவகுப்பு வெற்றியாளர் ஆவார்.[1][2]

தொழில்[தொகு]

2009 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற பிறகு, சாகித்தியா 2010 இல் கொரியாவின் சியோல் நகரத்தில் நடைபெற்ற வோர்ல்ட் மிஸ் யுனிவர்சிட்டி போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மிஸ் ஸ்பீச் பட்டத்தை வென்றார்.[3][4] சென்னையில் எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் இதழியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டே விளம்பரங்களிலும் தோன்றி வந்தார்.[5][6] ஒரு விளம்பர நடிகையாக சென்னை சர்வதேச ஃபேஷன் நிகழ்ச்சியில் முதல் மற்றும் மூன்றாவது தொடரில் பங்கு கொண்டார்.[7] சப்யாச்சி முகர்ஜி, ரெஹானே, ரிது குமார் போன்ற நன்கு அறியப்பட்ட இந்திய வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட வோல்ஸ்வேகன், ராங்லர், ரீபொக் , டோனி & கை மற்றும் ஜி.ஆர்.டி ஜூவல்லரி போன்ற விளம்பர நிழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளார். சாஹித்தியா 2014 இன் ஃபெமினா மிஸ் இந்தியாவின் முதல் 25 போட்டியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]

கௌதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் என்ற இருமொழி திரைப்படத்தில் சமந்தாவின் தோழியாக தயானா பாலகிருஷ்ணன் மற்றும் வித்யுலேகா ராமன் ஆகியோருடன் இணைந்து நடித்தார். ஆகஸ்ட் 2014 ல் வெளிவந்த ஆர். பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) என்றத் திரைப்படத்தில் உதவி இயக்குனராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. மேலும், அவர் அந்தாதி (2015) என்ற படத்தில் காவல் அதிகாரியின் பாத்திரத்தை சித்தரித்தார்.[9][10]

2017ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் புரோ கபடி லீக்கை சாகித்யா தொகுத்து வழங்கினார்.[11][12] 2017ஆம் ஆண்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியின் இந்தியா-ஆஸ்திரேலியா துடுப்பாட்ட அணியின் தொடரில் இவர் ஒரு பகுதியாக இருந்தார்.[11] தற்போது அவர் 2017-18இன் இந்திய சூப்பர் லீக் (ISL) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸிற்கான பிரீமியர் பேட்மின்டன் லீக் (பிபிஎல்) போன்றவற்றிக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளாரக உள்ளார்.[11] தூர்தர்ஷனில் வாரம் ஒரு கட்டுரை எழுதுகிறார்.[12][13]

குறிப்புகள்[தொகு]

  1. "Beauty contest winners relive the final crowning moment". The Hindu (Chennai, India). 22 July 2009 இம் மூலத்தில் இருந்து 25 ஜூலை 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090725031541/http://www.hindu.com/2009/07/22/stories/2009072258910200.htm. 
  2. "I like my life spicy, just like my sambhar: Sahithya Jagannathan". dtNext.in. 2017-10-06 இம் மூலத்தில் இருந்து 2017-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171222052455/http://www.dtnext.in/News/City/2017/10/06015538/1048033/I-like-my-life-spicy-just-like-my-sambhar-Sahithya-.vpf. 
  3. "Seoul Curry". https://www.thehindu.com/features/metroplus/fashion/Seoul-Curry/article15585195.ece. பார்த்த நாள்: 10 August 2018. 
  4. http://www.wmu.or.kr/eng/etc/rank.asp
  5. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/seoul-curry/article940294.ece
  6. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/models-made-in-madras/article5909032.ece
  7. "Archived copy". Archived from the original on 2012-05-12. பார்க்கப்பட்ட நாள் 2011-12-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. http://www.ibtimes.co.in/articles/543003/20140312/femina-miss-india-2014-sri-lanka-host.htm
  9. http://beautypageants.indiatimes.com/miss-india/archives/Miss-India-finalist-Sahithya-Jagannathan-bags-Tamil-film/articleshow/35103681.cms
  10. http://beautypageants.indiatimes.com/miss-india/archives/South-India-loves-beauty-queens-Sahithya-Jagannathan/articleshow/38549980.cms
  11. 11.0 11.1 11.2 "I thoroughly enjoy hosting sports events: Sahithya - Times of India" (in en). The Times of India. https://m.timesofindia.com/tv/news/tamil/i-thoroughly-enjoy-hosting-sports-events-sahithya/amp_articleshow/61669852.cms. 
  12. 12.0 12.1 "I like my life spicy, just like my sambhar: Sahithya Jagannathan" (in en-US). dtNext.in இம் மூலத்தில் இருந்து 2017-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171222052455/http://www.dtnext.in/News/City/2017/10/06015538/1048033/I-like-my-life-spicy-just-like-my-sambhar-Sahithya-.vpf. 
  13. "Don’t cry over boys, do some squats and make them cry!" (in en-US). dtNext.in இம் மூலத்தில் இருந்து 2017-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171222051148/http://www.dtnext.in/News/City/2017/10/07084132/1048182/Dont-cry-over-boys-do-some-squats-and-make-them-cry.vpf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகித்தியா_செகந்நாதன்&oldid=3908874" இலிருந்து மீள்விக்கப்பட்டது