உள்ளடக்கத்துக்குச் செல்

சத்யாபினவ தீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யாபினவ தீர்த்தர்
இறப்பு1706
நாச்சியார்கோயில், தமிழ்நாடு
இயற்பெயர்கேசவாச்சார்யர்
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்,
வைணவ சமயம்
குருசத்யநாத தீர்த்தர்

சத்யாபினவ தீர்த்தர் (Satyabhinava Tirtha) (இறப்பு 1706) இவர் ஓர் இந்து தத்துவவாதியும், அறிஞர்ரும், இறையியலாளரும், துறவியுமாவார். இவர் 1673 முதல் 1706 வரை உத்திராதி மடத்தின் தலைவராகப் பணியாற்றினார். மத்துவாச்சாரியருக்கு அடுத்தடுத்து 21 வது இடத்தில் இருந்தார். [1] [2] பாகவத தத்பார்ய நிர்ணயம், மத்துவரின் மகாபாரத தாத்பார்யா நிர்ணயம் பற்றிய வர்ணனையான மகாபாரத தாத்பார்ய நிர்ணய வியாக்ரணம் பற்றிய துர்கதா பவாடிபா என்ற சிறந்த படைப்புகளுக்கு இவர் பெயர் பெற்றவர். [1]

வாழ்க்கை

[தொகு]

குருபரம்பரைகளின் படி, இவர் கன்னடம்- பேசும் தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் கேசவாச்சார்யர் என்றப் பெயரில் பிறந்தார். [3] 1706 ஆம் ஆண்டில் இவர் இறந்த பிறகு, தமிழ்நாட்டின் கும்பகோணத்திலிருந்து சில மைல் தொலைவில் உள்ள நாச்சியார்கோயிலில் உள்ள மடத்தில் இவரது மரண எச்சங்கள் புதைக்கப்பட்டன. இவருக்குப் பின் சத்யபூர்ண தீர்த்தர் பொறுப்பேற்றார். [4]

இவரது மகாபாரத தாத்பார்ய நிர்ணய வியாக்கிரணம் என்பது மத்துவரின்மகாபாரத தாத்பார்ய நிர்ணயத்தைப் பற்றிய 3,220 கிரந்தங்கள் அடங்கிய ஓர் வர்ணனையாகும். துரகதபவதிபா என்பது மத்துவரின் பாகவத தாத்பார்ய நிர்ணயம் பற்றிய 8,160 கிரந்தங்கள் அடங்கிய ஓர் வர்ணனையாகும். இது மூல உரையின் கருத்துக்களை தெளிவுபடுத்துவதைத் தவிர, சில அறிஞர்கள் மற்றும் இலக்கண வல்லுநர்கள் எழுப்பிய மத்துவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விமர்சிக்கிறது. சத்யநாத குரு துதி என்ற இவரது படைப்பு தனது குரு சத்யநாத தீர்த்தரை நினைவுகூரும் ஒரு பாராட்டு கவிதையாகும். [5] [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Sharma 2000, ப. 501.
  2. Rao 1984, ப. 64.
  3. Rao 1984, ப. 65.
  4. Sharma 2000, ப. 534.
  5. Dasgupta 1975, ப. 59.
  6. Potter 1995, ப. 1421.

நூலியல்

[தொகு]
  • Sharma, B. N. Krishnamurti (2000). A History of the Dvaita School of Vedānta and Its Literature, Vol 1. 3rd Edition. Motilal Banarsidass (2008 Reprint). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120815759. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Rao, C. R. (1984). Srimat Uttaradi Mutt: Moola Maha Samsthana of Srimadjagadguru Madhvacharya. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Dasgupta, Surendranath (1975). A History of Indian Philosophy, Volume 4. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120804159. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Potter, Karl H. (1995). Encyclopedia of Indian philosophies. 1, Bibliography : Section 1, Volumes 1-2. Motilal Banarsidass Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120803084. {{cite book}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யாபினவ_தீர்த்தர்&oldid=3046789" இலிருந்து மீள்விக்கப்பட்டது