சத்தே பே சத்தா
| சத்தே பே சத்தா | |
|---|---|
| இயக்கம் | ராஜ் என். சிப்பி |
| தயாரிப்பு | ராமு என். சிப்பி |
| கதை | சதீசு பாத்நகர் காதர் கான் ஜோதி சுவரூப் |
| கதைசொல்லி | காதர் கான் |
| இசை | ராகுல் தேவ் பர்மன் |
| நடிப்பு | அமிதாப் பச்சன் ஹேம மாலினி அம்ஜத் கான் ரஞ்சீதா கவுர் சுதிர் சக்தி கபூர் கன்வர்ஜித் பயின்தல் |
| ஒளிப்பதிவு | அன்வர் சிராஜ் |
| கலையகம் | ரூபம் சித்ரா |
| வெளியீடு | 22 சனவரி 1982 |
| ஓட்டம் | 166 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
சத்தே பே சத்தா (Satte Pe Satta, "ஏழுக்கு ஏழு") என்பது 1982ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழி அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை ராஜ் என். சிப்பி இயக்கினார். ரோமு என். சிப்பி தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஹேம மாலினி, அம்ஜத் கான் மற்றும் ரஞ்சீதா கவுர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், சுதிர், சக்தி கபூர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[1]
ஏழு சகோதரர்களின் வாழ்க்கையில், மூத்த சகோதரரின் மனைவியான இந்து ஏற்படுத்தும் மாற்றங்களையும், பின்னர், சொத்து வாரிசைக் கொல்லும் சதியால் உருவாகும் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு திரைப்படத்தின் கதை நகர்கிறது. 1954ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான செவன் பிரைட்சு பார் செவன் பிரதர்சு-ஐ அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.[2]
கதைச் சுருக்கம்
[தொகு]ஒரு பண்ணை வீட்டில் வாழும் ஏழு சகோதரர்களின் கதையாகும். மூத்த சகோதரரான ரவி ஆனந்த், தனது ஆறு தம்பிகளை வளர்க்கிறார். கல்வியறிவும் சமூக நாகரிகமும் இல்லாத அவர்களின் வாழ்க்கை, ரவி இந்து என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்ட பிறகு மாறுகிறது. இந்து, அனைவரையும் நாகரிகமானவர்களாக மாற்ற முயற்சிக்கிறார். பின்னர் சகோதரர்கள் ஆறு இளம்பெண்களை காதலிக்கின்றனர்.
இதற்கிடையில், நடக்க முடியாத பணக்கார வாரிசான சீமா சிங்கின் சொத்துக்களை அபகரிக்க அவளது மாமா ரஞ்சித் சிங் சதி செய்கிறான். ரவியைப் போலவே தோற்றமளிக்கும் பாபு என்ற குற்றவாளியை பயன்படுத்தி சீமாவைக் கொல்ல திட்டமிடுகிறான். ஆனால் பாபு சீமாவைக் காதலித்து மனம் மாறுகிறான். இறுதியில் ரவி, பாபு மற்றும் சகோதரர்கள் இணைந்து ரஞ்சித்தைத் தோற்கடிக்கின்றனர். பின்னர் அனைவரும் தங்கள் காதலர்களை மணந்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
கதை மாந்தர்கள்
[தொகு]- அமிதாப் பச்சன் இரட்டை வேடங்களில் (ரவி ஆனந்த் – இந்துவின் கணவர், மூத்த சகோதரர் ,பாபு – ரவியாக (குற்றவாளி)
- ஹேம மாலினி – இந்து ஆனந்த்
- ரஞ்சீதா கவுர் – சீமா சிங்
- அம்ஜத் கான் – ரஞ்சித் சிங்
- சுதிர் – சோம் ஆனந்த்
- சக்தி கபூர் – மங்கள் ஆனந்த்
- ஆஷா சச்தேவ் – ஆஷா
- சோபினி சிங் – பிரீதா
- சரிகா – ஷீலா (சிறப்புத் தோற்றம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dubashi, Jagannath (28 February 1982). "Film review: Satte Pe Satta, starring Amitabh Bachchan, Hema Malini, Amjad Khan". India Today. Retrieved 6 May 2023.
- ↑ Sharma, Gaurav (15 October 2003). "Satte Pe Satta: a fun treat!". Rediff.com.