உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தீஸ் முனியாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தீஸ் முனியாண்டி
Satees Muniandy
பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்
பாகன் டாலாம் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
9 மே 2018 – 12 ஆகத்து 2023
முன்னையவர்தனசேகரன் அத்தரபதி
(பாராஜசெக)
பின்னவர்குமரன் கிருஷ்ணன்
(பாக்காத்தான்ஜசெக)
பெரும்பான்மை6,783 (2018)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 மார்ச்சு 1985 (1985-03-28) (அகவை 41)
தைப்பிங், பேராக்
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சிஜனநாயக செயல் கட்சி (DAP) (–2023)
சுயேச்சை (IND) (2023 தொடக்கம்)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் அரப்பான் (–2023)
உரிமை (–2023 தொடக்கம்)
முன்னாள் மாணவர்இலண்டன் பொருளாதாரம் அரசியல் அறிவியல் கழகம் (2022)[1]
பணிஅரசியல்வாதி

சத்தீஸ் முனியாண்டி (ஆங்கிலம்; மலாய்: Satees Muniandy‎) (பிறப்பு: 28 மார்ச் 1985) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மே 2018 முதல் ஆகத்து 2023 வரை பினாங்கு, பாகன் டாலாம் சட்டமன்றத் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றியுள்ளார். 2023 பினாங்கு மாநிலத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இவரின் அரசியல் வழிகாட்டியான இராமசாமி பழனிச்சாமியின் பெயருடன் இவரின் பெயரும் நீக்கப்பட்டது.[2][3]

பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியில் (DAP) உறுப்பினராக முன்பு சேவை செய்தார். பின்னர் 2023-ஆம் ஆண்டில், அந்தக் கட்சியில் இருந்து விலகி உரிமை கட்சியில் இணைந்தார்.[4] ஜனநாயக செயல் கட்சியில் மலேசிய இந்தியச் சமூகத்தின் செல்வாக்கைக் குறைத்து, மலேசிய சீனர்களை மையமாகக் கொண்டிருப்பதைக் காட்ட 2023 பினாங்கு மாநிலத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் சத்தீஸ் முனியாண்டியின் பெயர் நீக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக அமையலாம் எனவும் அறியப்படுகிறது.[5]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சத்தீஸ் முனியாண்டி தமது அரசியல் வாழ்க்கையை ஜனநாயக செயல் கட்சியின் வழியாக (DAP) தொடங்கினார்; மற்றும் 2018 மலேசியப் பொதுத் தேர்தலில் பாகன் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் 6,783 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

சூலை 2023-இல், பினாங்கு மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, ஜசெக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் பினாங்கு மாநிலத் தேர்தலில் பாகன் டாலாம் தொகுதியில், தம் இடத்தைத் தக்க வைக்க ஒரு சுயேச்சை வேட்பாளராக சத்தீஸ் போட்டியிட்டார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பினாங்கு மாநில சட்டமன்றம்[6][7][8]
ஆண்டு தொகுதி வேட்பாளர் பெற்ற
வாக்குகள்
% எதிரணி வாக்குகள் % பதிவான
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2018 N09 பாகன் டாலாம் சத்தீஸ்
முனியாண்டி
(ஜசெக)
10,701 72.50% தினகரன் ஜெயபாலன் (மஇகா) 3,918 26.60% 14,948 6,783 81.70%
தியோ உவாட் லாய் (மஐக) 51 0.30%
தியோ அக் பிங் (மமக) 45 0.30%
ஜாஸ்பர் ஓய் சோங் ஆன் (பினாங்கு முன்னணி) 36 0.30%
2023 சத்தீஸ்
முனியாண்டி (சுயேச்சை)
1,111 7.56% குமரன் கிருஷ்ணன் (ஜசெக) 10,506 71.49% 14,868 7,542 70.06%
ஜெயராமன் குஞ்சு கண்ணு (பாஸ்) 2,964 20.17%
எஸ். ராஜசகானன் (பினாங்கு முன்னணி) 115 0.78%

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Studied at The London School of Economics and Political Science - LSE". facebook. Retrieved 23 January 2026.
  2. "Satees second DAP man to quit, contest polls as independent". The Vibes (in ஆங்கிலம்). 28 July 2023. Retrieved 23 January 2026.
  3. OTHMAN, MOHD ISKANDAR (4 August 2023). "Resigned but sacked: Former Bagan Dalam assemblyman's dilemma". Sinar Daily (in ஆங்கிலம்). Retrieved 23 January 2026.
  4. "Dropped Penang DAP rep quits party, to defend seat as independent". Malaysiakini. 28 July 2023. Retrieved 23 January 2026.
  5. "A man celebrates his father's house as if it were his own – Satish Muniandy". Makkal Osai. Retrieved 23 January 2026.
  6. "The Star Online GE14 Penang". election.thestar.com.my.
  7. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES". Retrieved 2023-12-03.
  8. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES" (PDF). Retrieved 2023-12-03.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீஸ்_முனியாண்டி&oldid=4451413" இலிருந்து மீள்விக்கப்பட்டது