உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தீஸ்கர் ராஜ்ய விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்தீஸ்கர் உருவாக்கப்பட்ட நாள் , அல்லது சத்தீஸ்கர் ராஜ்ய விழா, என்பது சத்தீஸ்கரை ஒரு சுதந்திர மாநிலமாக நவம்பர் 1, 2000 அன்று இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை நினைவுகூறும் வகையில் [1] ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் நாட்டின் 26 வது மாநிலமாக ஆக்கப்பட்டது. முன்னதாக, இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

வரலாறு

[தொகு]

சத்தீஸ்கர் தட்சிண கோசலம் என்ற பெயராலே முன்னதாக அழைக்கப்பட்டது, இது முகலாயர் காலத்தில் ரத்தன்பூர் என்று மறுபெயரிடப்பட்டட் து. இருப்பினும், மராத்தியப் பேரரசின் ஆட்சியின் போது தான், சத்தீஸ்கர் என்ற பெயர் பிரபலமானது மற்றும் 1795 ஆம் ஆண்டில் தான் இந்த பெயர் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் முதன்முதலில் தோன்றியது. இப்பகுதி கலிங்கத்தின் சேடி வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இடைக்காலத்தில், கிழக்கு சத்தீஸ்கரின் பெரும் பகுதி ஒடிசாவின் சம்பல்பூர் இராச்சியத்தால் ஆளப்பட்டது.

இதற்கிடையில், சத்தீஸ்கரின் புராண பெயர் கோசலை ராஜ்ஜியம் (பகவான் ஸ்ரீ ராமரின் தாய்) [2] என்றும் ஒரு கருதுகோள் உண்டு. மேலும் சத்தீஸ்கர் என்ற சொல் 36 கோட்டைகளைக் குறிக்கிறது, ஏனெனில் இப்பகுதியில் உள்ள கோட்டைகளின் எண்ணிக்கைகளிலிருந்து கூட இந்த மாநிலம் இப்பெயரை பெற்றிருக்கலாம். ஆகஸ்ட் 25, 2000 அன்று, இந்தியக்குடியரசுத் தலைவர் மத்தியப்பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்திற்கு [3] ஒப்புதல் அளித்தார். அதன்படி 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியை மத்தியப்பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் என மத்திய அரசு நிர்ணயித்த படி பிரிக்கப்பட்டது. அப்போதிருந்து, சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 முதல் 5 நாட்கள் இந்த திருவிழாவை மாநில அரசு நடத்துகிறது. முதல் நிகழ்வு ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது & முதல் தலைமை விருந்தினராக சோனியா காந்தி இருந்தார், 2004 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை அடல் நகரில் உள்ள மைதானத்தில் இவ்விழா நடைபெற்றது.2019 ம் ஆண்டு முதல் ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் ராஜ்ய விழா கொண்டாட்டம்

[தொகு]

ஒவ்வொரு ஆண்டும், மாநில அரசு நவம்பர் 1 முதல் தலைநகர் ராய்ப்பூரில் ஐந்து நாள் திருவிழாவை நடத்துகிறது. இந்த விழா மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்துகிறது. அதன்படி ஐந்து நாட்களும் விழா மைதானத்தில் கண்காட்சிகளும், பல்வேறு பழங்குடி மக்களின் நடன நிகழ்ச்சிகளும் கலை விழாக்களும் நடைபெறும். [4] கைவினை கலைஞர்கள் அவர்களது படைப்புக்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் சத்தீஸ்கரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் காலை முதல் மாலை வரை நடைபெற்று மக்கள் கலந்து கொள்ள மாநில அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசின் வளமான பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுரிமைகளை ஆதரிப்பதில் பழங்குடியினரின் பங்கையும் இந்த கலாச்சார விழா சித்தரிக்கிறது.

இந்த நிகழ்வை, பல்வேறு ஆண்டுகளில் நரேந்திர மோடி, [5] பிரணாப் முகர்ஜி, [6] பாடகர் சுக்விந்தர் சிங், கிருஷ்ணகுமார் குன்னத் போன்ற பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்திய, உலக பிரபலங்கள் நேரில் பார்த்துள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "csidc". csidc.in. Archived from the original on 2018-01-19. Retrieved 2021-12-19.
  2. "छत्तीसगढ़ स्थापना दिवस: छत्तीसगढ़ राज्योत्सव का इतिहास और महत्व". ज्ञान सागर भारत (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-19.
  3. "aaa". indiacode.nic.in. Retrieved 2018-02-12.
  4. "छत्तीसगढ़ के राज्योत्सव में शामिल होंगे प्रधानमंत्री नरेंद्र मोदी!– News18 हिंदी". News18 India. Retrieved 2018-02-12.
  5. "ராஜ்யோத்சவ், சுதா, ரூபே, மாலா, கர்தானி, பனுவாரியா போன்ற சத்தீஸ்கரி நகைகளில் பழங்குடியினர் சந்தை".
  6. "Shri Pranab Mukherjee: Former President of India". pranabmukherjee.nic.in. Retrieved 2018-02-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீஸ்கர்_ராஜ்ய_விழா&oldid=4327762" இலிருந்து மீள்விக்கப்பட்டது