சத்தீஸ்கர் சுவாமி விவேகானந்தர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தீஸ்கர் சுவாமி விவேகானந்தர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை"எழுந்திரு! விழித்தெழு! இலக்கை அடையும் வரை நிற்காதே."
வகைமாநில அரசுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2005 (2005)
துணை வேந்தர்எம். கே. வர்மா
அமைவிடம்,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புஇந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
இணையதளம்www.csvtu.ac.in

சத்தீஸ்கர் சுவாமி விவேகானந்தர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Chhattisgarh Swami Vivekanand Technical University (CSVTU) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாய் நகரத்தில் செயல்படும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். சத்தீஸ்கர் மாநில அரசின் கீழ் செயல்படும் இப்பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா 30 ஏப்ரல் 2005 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். [1]இப்பல்கலைக்கழகத்திற்கான 250 ஏக்கர் நிலம் பிலாய் இரும்பு உற்பத்தி நிறுவனத்தால் தானமாக வழங்கப்பட்டது.[2]சுவாமி விவேகானந்தர் நினைவாக இப்பல்கலைக்கழகத்தின் பெயர் சூட்டப்பட்டது.[3]

படிப்புகள்[தொகு]

2013ல் இத்தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் 7 பிரிவுகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், பயன்பாட்டு அறிவியல், மேலாண்மை & தொழில்முனைவு, மருந்தியல், கட்டிடக் கலை, மனிதநேயம் மற்றும் சூழலியல் & சுற்றுச்சூழல் படிப்புகளை வழங்குகிறது.[4][5]

இந்திய உருக்கு ஆணையத்தின் ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு[தொகு]

இத்தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்புகளில் இந்திய உருக்கு ஆணையத்தின் ஊழியர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் இளநிலை படிப்புகளில் இந்திய உருக்கு ஆணையத்தின் ஊழியர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]