சத்தீசு பிரதான்

சத்தீசு பிரதான் (Satish Pradhan) இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். சிவ சேனா என்ற அரசியல் கட்சியின் உறுப்பினராவார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]சத்தீசு பிரதான் 1940 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 29 ஆம் நாளன்று பிறந்தார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]அரசியல்வாதியான இவர் ஆரம்ப நாட்களில் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள தானே நகரில் சிவ சேனா என்ற அரசியல் கட்சியை நிறுவுவதில் முக்கியப் பங்கு வகித்தார். 1974 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை தானே நகரத்தின் முதல் நகரத் தந்தையாக இருந்தார். பின்னர், 1986 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை, மீண்டும் தானே நகரில் நகரத் தந்தையாகப் பணியாற்றினார். மகாராட்டிர மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றினார். முதலில் 1992 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 முதல் 1998 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 வரையும் மற்றும் இரண்டாவது முறையாக 1998 ஆம் ஆண்டு சூலை 5 முதல் 2024 ஆம் ஆண்டு இறக்கும் வரையும் இருந்தார். சிவ சேனா கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவராகவும் பணியாற்றினார்.[1]
இறப்பு
[தொகு]சத்தீசு பிரதான் 2024-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 ஆம் நாள் தனது 84 ஆவது வயதில் காலமானார்.[2]