சத்திரக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்திரக்குடி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள போகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓர் சிற்றூர் ஆகும்[1]. இங்கு ஒரு தொடருந்து நிலையமும் உண்டு. இராமநாதபுரத்திற்கும் மானாமதுரைக்கும் இடைப்பட்ட தொடருந்து வழித்தடத்தில் இது ஒரு நிறுத்தமாகும்.

பெயர்க் காரணம்[தொகு]

மன்னர் காலத்தில் இராமேசுவரம் செல்லும் பயணிகளுக்காக போகலூரில் சத்திரம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்தச் சத்திரம் இருந்த இடம் பின்னாளில் சத்திரம் என்றும் இப்போது சத்திரக்குடி என்றும் மருவி வந்துள்ளது . போகலூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதி.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திரக்குடி&oldid=3454925" இலிருந்து மீள்விக்கப்பட்டது