சத்தியமார்க்கம் இணையத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சத்தியமார்க்கம்.காம்
Satyamargam.JPG
"சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; அசத்தியம் அழிந்தே தீரும்..(திருமறை 17:81)"
உரலிwww.satyamargam.com
தளத்தின் வகைஇஸ்லாமிய மார்க்கம் / அரசியல் / செய்திகள
உருவாக்கியவர்admin@satyamargam.com
வெளியீடு2006
தற்போதைய நிலைசெயற்படுகிறது


சத்தியமார்க்கம்.காம் சர்வதேச அளவில் பரவியுள்ள தமிழ் மொழி பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்டதொரு இணைய தளம் ஆகும். முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தவர்கள் அனைவருக்குமான பொதுவான தளம் என்றாலும் அனைத்துத் தரப்பினரும் இஸ்லாம் தொடர்பான தகவல்களைப் பெற உதவும் ஒரு கலைக்களஞ்சியமாக இத்தளம் உள்ளது.

கல்வி என்ற தேடல் / அறிவுத் தாகம் உள்ளவர்களுக்கு உரிய அறிவினைத் தருவது, இஸ்லாம் பற்றிய வினாக்களுக்கு விடையளிப்பது, இஸ்லாம் பற்றிய அவதூறுகளுக்குத் தக்க விளக்கம் அளிப்பது, உதவி கேட்போருக்குத் தக்க ஆதரவு அளிப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

இளம் எழுத்தாளர்கள் அடையாளம் காணப்பட வேண்டும், உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் அவர்தம் திறமைகள் வெளிக்கொணர வைக்கப்பட வேண்டும் என்ற நன்நோக்கம் 2007 ஆம் ஆண்டில் நடந்த சர்வதேச அளவிலான கட்டுரைப்போட்டி மூலம் நிறைவேறியது.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பல்வேறு சுவையான அம்சங்கள் நிறைந்துள்ளன. முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தினர் அதிகம் வருகை தரும் ஐயமும்-தெளிவும் பகுதி, மனம் திறந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் விவாத அரங்கம், சர்வதேச அளவிலான நிகழ்வுகளை உடனுக்குடன் சூடாக அறிந்து கொள்ள செய்திகள் பகுதி, பிற தளச் செய்திகளை ஒரே இடத்தில் காணும் செய்தித் திரட்டி போன்ற பல்வேறு அம்சங்கள் இத்தளத்தில் நிறைந்துள்ளன. எந்த ஒரு ஆக்கத்திலும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறும் சுவையான பின்னூட்ட வசதி இத்தளத்தின் சிறப்பம்சமாகும். அரசியல், ஆன்மீகம், குடும்ப வாழ்க்கை, மருத்துவம், அறிவியல், கல்வி போன்ற அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது சத்தியமார்க்கம்.காம் தளம்.

வெளி இணைப்புகள்[தொகு]