சத்தியகாம ஜாபாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சத்தியகாம ஜாபாலா (Satyakama Jabala) சாந்தோக்கிய உபநிடதத்தின் நான்கவாது அத்தியாத்தில்[1] கூறப்படும் சிறுவனும், பிந்தைய வேத கால ரிஷியும் ஆவார். இவரி வழித்தோன்றலில் வந்தவரே ஜாபாலி முனிவர் ஆவார்.

சத்தியகாம ஜாபாலா சிறுவனாக இருந்த போது குரு கௌதமரிடம் வேத பாடம் பயிலச் சென்ற போது, உனது கோத்திரம், தாய், தந்தையரின் விவரம் கூறக் கேட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த சத்தியகாம ஜாபாலா, தனது தந்தையைக் குறித்து தனது தாய் ஜாபாலாவிடம் விசாரிக்கிறான். தன் இளமைக் காலத்தில், பல இடங்களுக்குச் சென்று ஊழியம் செய்த காரணத்தினால், உனது தந்தை யார் எனத் தெரியவில்லை என ஜாபாலா தன் மகனிடம் கூறுகிறாள்.[2]

தன் தாய், தனது தந்தையைப் பற்றி கூறியவற்றை அனைத்தும் ஒளிவு மறைவு இன்றி, தனது குருவிடம் கூற, அவரும் சத்தியகாம ஜாபாலாவின் நேர்மையைப் பாராட்டிய கௌதமர், சத்தியகாம ஜாபாலியைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டார்.[3]

குரு கௌதமர், சத்தியகாம ஜாபாலாவிடம் 400 பசுக்களை மேய்த்து, அதனை ஆயிரம் பசுக்களாக திருப்பிக் கொண்டு வரவேண்டும் என பணித்தார். சத்தியகாமன், பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது சிந்திக்கையில் பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள், திசைகள், பூமி, வானம், நீர், நெருப்பு, வாயு (பிராணன்) போன்ற பஞ்சபூதங்கள் அனைத்தும் பிரம்மத்தின் வடிவங்களே என உணர்ந்து கொண்டார். மனித உடல் கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களால் ஆனது என்றும் உணர்ந்து கொண்ட[3] சத்தியகாம ஜாபாலா ஆயிரம் பசுக்களுடன் தனது குருகுலத்தை நோக்கிச் சென்றான்.[2]

சத்தியகாம ஜாபாலாவின் பிரம்ம ஞானத்தை அறிந்த கௌதம முனிவர், சத்தியகாமனை பாராட்டினார். பின்னர் சத்தியகாம ஜாபாலா ஜாபால உபநிடதத்தை இயற்றினார்.[4] சாந்தோக்கிய உபநிடதத்தில் சத்தியகாம ஜாபாலரின் சீடராக உபகோசல கமலாயணன் அறியப்படுகிறார்.[5]

சத்தியகாம ஜாபாலாவின் வழித்தோன்றலில் பிறந்தவரே ஜாபாலி முனிவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Robert Hume, Chandogya Upanishad 4.4 - 4.9, The Thirteen Principal Upanishads, Oxford University Press, pages 218-221
  2. 2.0 2.1 Paul Deussen, Sixty Upanishads of the Veda, Volume 1, Motilal Banarsidass, ISBN 978-8120814684, pages 122-126 with preface and footnotes
  3. 3.0 3.1 Chandogya Upanishad with Shankara Bhashya Ganganath Jha (Translator), pages 189-198
  4. Paul Deussen, Sixty Upanishads of the Veda, Volume 2, Motilal Banarsidass, ISBN 978-8120814684, pages 757-758
  5. Danielle Feller (2004). Sanskrit Epics. Motilal Banarsidass. பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-2008-1. https://books.google.com/books?id=G3yQJU-4mOoC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியகாம_ஜாபாலா&oldid=2716776" இருந்து மீள்விக்கப்பட்டது