உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தர்பூர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தர்பூர் கோயில், தில்லி
வளாகத்திலுள்ள தென்னிந்தியப்பாணிக் கோயில்
சத்தர்பூர் கோயில் is located in டெல்லி
சத்தர்பூர் கோயில்
தில்லியின் வரைபடம்
அமைவிடம்
நாடு:இந்தியா இந்தியா
மாநிலம்:தில்லி
மாவட்டம்:தெற்கு தில்லி
அமைவு:சத்தர்பூர், தெற்கு தில்லி மாவட்டம், தில்லி
ஆள்கூறுகள்:28°30′7″N 77°10′46″E / 28.50194°N 77.17944°E / 28.50194; 77.17944
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:சோழக் கட்டடக்கலை
வரலாறு
அமைத்தவர்:சாந்த் நாக்பால்
இணையதளம்:www.chhattarpurmandir.org

ஸ்ரீ ஆத்யா காத்யாயனி சக்தி பீடம் அல்லது சத்தர்பூர் கோயில் என்பது இந்துத் தெய்வமான காத்யாயனிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும். இது புது தில்லியின் புறநகரில் தென்மேற்கிலுள்ள சத்தர்பூரில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் முழு வளாகமும் 28 ஹெக்டேர் (70 ஏக்கர்) பரப்பளவுடையது.[1] இது அக்ஷர்தாம் கோயிலுக்கு அடுத்தபடியாக தில்லியில் உள்ள இரண்டாவது பெரிய கோயிலாகும்.[2] இந்த கோயில் பளிங்குகளால் கட்டப்பட்டுள்ளது. அனைத்து முகப்புகளிலும் வலை (துளையிடப்பட்ட கல் திரை) வேலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இதை வேசர கட்டிடக்கலை என வகைப்படுத்தலாம்.

1998இல் இறந்த பாபா சாந்த் நாக்பால் அவர்களால் 1974இல் இந்தக் கோயில் ஆரம்பிக்கப்பட்டது. அவரது சமாதி ஆலயம் இந்தக் கோயில் வளாகத்திற்குள் உள்ள சிவ-கௌரி நாகேசுவரர் கோயிலின் வளாகத்தில் அமைந்துள்ளது.[3]

சரிஸ்கா புலிகள் காப்பகத்திலிருந்து தில்லி வரை உள்ள வடக்கு ஆரவல்லி சிறுத்தை வனவிலங்கு நடைபாதை இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ஒரு முக்கியமான பல்லுயிர்ப் பகுதியாகும். இந்தச் சரணாலயத்தைச் சுற்றியுள்ள வரலாற்று இடங்களாவன பட்கல் ஏரி (6 கிமீ வடகிழக்கு), 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன சூரஜ்குண்ட் நீர்த்தேக்கமும் அனங்பூர் அணையும், தம்தாமா ஏரி, துக்ளகாபாத் கோட்டை மற்றும் அடிலாபாத் இடிபாடுகள் ஆகும்.[4] இது ஃபரிதாபாத்தின் பாலி-துவாஜ்-கோட் கிராமங்களில் உள்ள பருவகால நீர்வீழ்ச்சிகள், புனித மங்கர் பானி மற்றும் அசோலா பட்டி வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.[5] தில்லி மேட்டுநிலத்தின் காடுகள் நிறைந்த மலைப்பாங்கான பகுதியில் கைவிடப்பட்ட திறந்த குழிச் சுரங்கங்களில் பல ஏரிகள் உருவாகியுள்ளன.

வளாகம்

[தொகு]
சிவாலயத்தில் நந்தி, சத்தர்பூர் கோயில்
லட்சுமி விநாயகர் கோயில்
கௌரி நாகேஸ்வரர் கோயில் பிரதான நுழைவாயில்
சட்டர்பூர் மந்திர் வளாகத்திற்குள் ஸ்ரீ சிவ் மந்திர்
சத்தர்பூர் கோயிலின் பிரதான முற்றம்
பிரதான கோயில் கோபுரம்

இந்தக் கோயில் வளாகத்தின் பரப்பளவு 24 ஹெக்டேர் (60 ஏக்கர்) ஆகும். இங்கு சிறியதும் பெரியதுமாக இருபதுக்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவை மூன்று சிறிய வளாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நவராத்திரி கொண்டாட்டங்களின் போது வணங்கப்படும் இந்துத் தெய்வமான சக்தியின் ஒன்பது வடிவங்களான நவதுர்காவின் ஒரு பகுதியாக இருக்கும் காத்யாயனி தேவி இக்கோயிலின் முக்கிய தெய்வம் ஆவார்.

பிரதான கோயிலுக்குள் ஒரு பக்க சன்னதியில் காத்யாயனி தேவியின் சன்னதி உள்ளது. இது வருடத்திற்கு இருமுறை நவராத்திரி பருவத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்காக வளாகத்திற்குள் கூடுகிறார்கள். அருகிலுள்ள ஒரு அறை வெள்ளியில் செய்யப்பட்ட மேசைகளுடனும் நாற்காலிகளுடனும் கூடிய வாழ்க்கை அறையாக அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறை படுக்கையறை என்று கருதப்படுகிறது. அங்கு ஒரு படுக்கை, ஆடைகள் வைக்கும் இடம், ஒரு மேசை என்பன வெள்ளியில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து அடுத்ததாக ஒரு பெரிய பிரார்த்தனை மண்டபம் அமைந்துள்ளது. அங்கு சமயச் சொற்பொழிவுகள், பஜனைகள் போன்றவை நடாத்தப்படுகின்றன. பிரதான கோயிலின் நுழைவாயிலில் ஒரு பழைய மரம் நிற்கிறது. அந்த மரத்தில் பக்தர்கள் தமது விருப்பத்தை நிறைவேற்றப் புனித நூல்களைக் கட்டுகிறார்கள். துர்கா கோயிலின் மற்றொரு சன்னதி இராதாகிருஷ்ணர், பிள்ளையார் கோயில்களுக்கு மேலே உள்ளது. இது காலை முதல் மாலை வரை பக்தர்களுக்காகத் திறந்திருக்கும்.[6]

இவை தவிர, இந்த வளாகத்தில் ராமர், விநாயகர் மற்றும் சிவன் ஆகிய கடவுளர்க்கான கோயில்களும் உள்ளன. இந்தக் கோயில்கள் தென்னிந்திய மற்றும் வட இந்தியப் பாணி கோயில் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chhatarpur temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. ↑ "Chattarpur Mandir/Temple or Sh. Adhya Katyayani Shakti Peeth". 9 March 2019.
  2. ↑ "Chhatarpur Mandir | Delhi, India | Attractions". Lonely Planet (in ஆங்கிலம்). Retrieved 2023-11-23.
  3. ↑ Founder of Chhatarpur temple dies [தொடர்பிழந்த இணைப்பு] Indian Express, 17 December 1998.
  4. ↑ ASOLA BHATTI WILD LIFE SANCTUARY பரணிடப்பட்டது 16 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம், Department of Forest, Delhi Government
  5. ↑ "पाली गांव की पहाड़ियों पर बनेगा डैम, रोका जाएगा झरनों का पानी". Navbharat Times.
  6. ↑ "Chhatarpur Temple- Chattarpur Temple Delhi, Chattarpur Temple, Chhatrapur Mandir Delhi India". www.culturalindia.net.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தர்பூர்_கோயில்&oldid=4585533" இலிருந்து மீள்விக்கப்பட்டது