சத்கபர்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

சத்கபர் (Saat Kabar) என்பது கர்நாடக மாநிலம், பிஜப்பூரில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தளம் ஆகும். இங்குதான் அப்சல்கான் மற்றும் அவரின் அறுபது (60) மனைவிகளின் கல்லறைகள் அமைந்துள்ளன. இந்தக் கல்லறைகள் குறித்து நிலவும் கதை பின்வறுமாறு மாராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மீது அப்சல்கான் போர் தொடுத்ததே இக்கல்லறை அமைய காரணம். ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட அப்சல்கான் தமது தலைமை ஜோதிடரை அழைத்து சிவாஜியின் மீது போர் தொடுத்தால் போரில் வெற்றி பெற முடியுமா என வினவினான். அதற்கு தலைமை ஜோதிடர், சிவாஜி மீது போர் தொடுத்தல் போரில் நிச்சயம் நீ கொல்லப்படுவாய் என கூறினார். இதைக்கேட்டு மனமுடைந்த அப்சல்கான் ஒரு வேளை தாம் போரில் தோற்று உயிரிழந்தால் தம் அறுபது மனைவிகளும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வார்கள் என பயந்தான். அதனால் தம் அறுபது மனைவிகளையும் ஒரே இடத்தில் கூடச் செய்து தமது படை வீரர்களை விட்டு கொல்ல முடிவு செய்தான். அவர்களில் இருவர் தப்பிவிட அவர்களையும் தேடி கண்டுபிடித்து கொலை செய்தான். பிறகு அறுபது சடலங்களும் உள்ளதா என உறுதி செய்து கொண்டு போருக்கு புறப்பட்டான். போரில் ஜோதிடர் கூறியபடியே அப்சல்கான் சிவாஜியால் புலி நகத்தால் கிழித்துக் கொல்லப்பட்டான்.[1]

மேற்கோள்கள்[edit]

  1. "http://www.vijapuraonline.in/city-guide/saat-kabar-in-bijapur". vijapuraonline.in. பார்த்த நாள் 9 அக்டோபர் 2017.