உள்ளடக்கத்துக்குச் செல்

சத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத் (Sat) (சமக்கிருதம்: सत्) எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு உண்மையான, மாறாத, முக்காலங்களில் என்றும் நிலைத்து இருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது.[1] பண்டைய இந்திய வேதாந்த சாத்திரங்களில், சத்தியம், அனந்தம் , பிரம்மம், எனும் நிலையான பரம்பொருளைக் குறிக்க சத் எனும் சொல் முன்னொட்டாக குறிக்கப்படுகிறது.[2] [3][4]

சத் குறித்து பிரகதாரண்யக உபநிடத்தின் 1.3.28 மந்திரத்தில் சத் எனும் பிரம்மதைக் குறித்து சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

Asato mā sad gamaya / tamaso mā jyotir gamaya / mṛtyor mā amṛtam gamaya
"மாயையிலிருந்து உண்மைக்கு அழைத்து செல்க; இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்து செல்க; இறப்பிலிருந்து இறவாமைக்கு அழைத்து செல்க"

சத்தியம், சத்துவ குணம், உண்மை, தூய்மை, நன்மை ஆகிய சமசுகிருத சொற்களின் அடிச்சொல்லே சத் ஆகும். ஆத்மாவை அறிய உதவும் சாத்திரங்களை, சத்-சாத்திரங்கள் என்றும், பிரம்மதை அறிய ஆவல் கொண்டவனைச் சத்தியவான் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.[5]

சத் எனும் சொல்லின் எதிர்மறைச் சொல் அசத் ஆகும். அசத் எனும் மாயையால் படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சமும், சீவராசிகளும் நம் பார்வைக்கு தெரிந்தாலும், அவைகள் அனைத்தும் ஒரு காலத்தில் அழியக் கூடியது, நிலையற்றது, பொய் ஆகும்.[1][6]

பொருள்

[தொகு]

சத் எனும் சொல் இடத்திற்கு ஏற்ற படி பல பொருள்களைத் தருகிறது.[1][7]

  • "மூன்று காலத்திலும் மாறாதது"
  • சீவராசிகளுக்கும், காலத்திற்கும், இடத்திற்கும் அப்பாற்பட்டது
  • "பிரபஞ்சம் அனைத்திலும் சீராக ஊடுருவிப் பரந்துள்ளது"
  • "முற்றான உண்மை"
  • "சத்தியம்"
  • "பிரம்மம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Sir Monier Monier-Williams, A Sanskrit-English Dictionary: Etymologically and Philologically Arranged with Special Reference to Cognate Indo-European Languages, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120831056, pages 1134-1139
  2. Sir Monier Monier-Williams, A Sanskrit-English Dictionary: Etymologically and Philologically Arranged, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120831056, pages 1134-1139
  3. Chaudhuri, H. (1954), The Concept of Brahman in Hindu Philosophy, Philosophy East and West, 4(1), 47-66
  4. Aurobindo & Basu (2002), The Sadhana of Plotinus, Neoplatonism and Indian Philosophy, State University of New York Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0791452745, pages 153-156
  5. Arthur Anthony Macdonell, A Practical Sanskrit Dictionary, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120820005, pages 329-331
  6. Arthur Anthony Macdonell, A Practical Sanskrit Dictionary, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120820005, pages 34
  7. K. Ishwaran, Ascetic Culture: Renunciation and Worldly Engagement, Brill, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004114128, pages 143-144
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்&oldid=4056775" இலிருந்து மீள்விக்கப்பட்டது