உள்ளடக்கத்துக்குச் செல்

சதௌரா போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதௌரா போர்
முகலாயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையிலான போரின் பகுதி பகுதி
நாள் 1710
இடம் சதௌரா
சீக்கியர்கள் வெற்றி.[1][2][3][4][5][6]
நிலப்பகுதி
மாற்றங்கள்
சீக்கியர்களால் சதௌரா கைப்பற்றப்பட்டது
பிரிவினர்
முதல் சீக்கிய மாநிலம்
  • குடியானவர்கள்
முகலாயப் பேரரசு
  • சையீதுகள்
  • ஷேக்குகள்
தளபதிகள், தலைவர்கள்
  • ஒசுமான் கான்
இழப்புகள்
Unknown Unknown

சதௌரா போர் (Battle of Sadhaura) என்பது 1710 ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கும் சயீத் மற்றும் ஷேக் ஆகிய முகலாயர்களுக்கும் இடையே நடந்த போராகும். பேரரசின் படைகள் தோற்கடிக்கப்பட்டு நகரின் சுவர்களுக்கப்பால் சென்று ஒளிந்து தஞ்சமடைந்தன. பண்டாவின் படைகள் கோட்டையைக் கைப்பற்றி அதைத் தரைமட்டத்திற்கு சமமாக்கின. இதன் விளைவாக பண்டா சிங் பகதூர், ஓசுமான் கானைத் தோற்கடித்து வெற்றி பெற வழிவகுத்தது.[7]

பின்னணி

[தொகு]

சதௌரா நகரை ஆண்ட உஸ்மான் கான், பாங்கானி போரில் குரு கோபிந்த் சிங்கிற்கு உதவி செய்ததற்காக முஸ்லிம் பீர் சையத் பத்ருதீன் ஷா (பீர் புது ஷா என்றும் அறியப்படுபவர்) என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்தார். மேலும் உஸ்மான் கான் இந்துக்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளுக்காகவும், அவர்களின் வீடுகளுக்கு முன்பாக பசுக்களை வெட்டியதற்காகவும், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தங்கள் இறந்தவர்களை தகனம் செய்வதையும் மத நிகழ்வுகளை நடத்துவதையும் தடை செய்த உத்தரவிற்காகவும் சதௌராவை நோக்கி படையெடுத்தனர்.[8]

விளைவு

[தொகு]

ஒஸ்மான் கான் சிறைப்பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.[9] ஆளும் உயரடுக்கினருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய விரும்பிய, துன்பத்தை அனுபவித்து வந்த விவசாயிகள் பலர் பண்டா சிங் பகதூரின் படைகளில் சேர்ந்தனர். கோபமடைந்த கும்பல் நகரத்தை சூறையாடி அழித்து சையத் பத்ருதீன் ஷாவின் வீட்டில் தஞ்சம் புகுந்த அனைவரையும் கொன்றது.[10] பண்டாவின் படைகள் நகரைக் கொள்ளையடித்தன. தொடர்ந்து நகர மக்கள் பெருமளவில் கொலை செய்யப்பட்டனர்.[11][12] பின்னர் ஒஸ்மான் கான் சீக்கியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.[13] பின்னர், பண்டா சிங் பகதூர் சதௌராவிற்கு ஆளுநர் ஒருவரை நியமித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gandhi, Surjit Singh (1980), Struggle of the Sikhs for Sovereignty, p. 5
  2. Sagoo, Harbans (2001). Banda Singh Bahadur and Sikh Sovereignty. Deep & Deep Publications.
  3. Raj Pal Singh (2004). The Sikhs : Their Journey Of Five Hundred Years. Pentagon Press. pp. 46–47. ISBN 9788186505465.
  4. History of Islam, p. 506, கூகுள் புத்தகங்களில்
  5. Singha, H.S. (2005). Sikh Studies, Book 7. Hemkunt Press. p. 34. ISBN 9788170102458.
  6. T K Anand (2005). Essence of Sikhism. Vikas Publishing House. p. 65. ISBN 9788125919483.
  7. Patwant Singh (2001). The Sikhs. Doubleday. p. 71. ISBN 9780385502061.
  8. Surjit Singh Gandhi (1999). Sikhs in the Eighteenth Century. Singh Bros. p. 29. ISBN 9788172052171.
  9. Singh, Rishi (2015). State Formation and the Establishment of Non-Muslim Hegemony: Post-Mughal 19th-century Punjab (in ஆங்கிலம்). SAGE Publications. p. 66. ISBN 9789351505044.
  10. Patwant Singh (2007). The Sikhs. Crown Publishing Group. pp. 68, 69. ISBN 9780307429339.
  11. Macauliffe, Max Arthur (2013-03-28) [1909]. The Sikh Religion: Its Gurus, Sacred Writings and Authors (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 247. ISBN 978-1-108-05547-5.
  12. Burn, Sir Richard (1937). The Cambridge History Of India (the Mughul Period) Vol.4. p. 322.
  13. Singh, Harbans (2004). The Encyclopedia Of Sikhism - Volume IV S-Z (2nd ed.). Punjabi University Patiala. p. 6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதௌரா_போர்&oldid=4189811" இலிருந்து மீள்விக்கப்பட்டது