சதுரங்கப்பட்டினம்
சதுரங்கப்பட்டினம் சத்ராஸ் | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 12°31′30″N 80°9′44″E / 12.52500°N 80.16222°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ் நாடு | ||||||
மாவட்டம் | காஞ்சிபுரம் மாவட்டம் | ||||||
அருகாமை நகரம் | காஞ்சிபுரம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
சதுரங்கப்பட்டினம் தமிழ் நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கரையில் அமைந்துள்ள ஒரு நகரம். இது சென்னைக்குத் தெற்கே 70கிமி தொலைவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் இப்பெயரை ஆங்கிலப்படுத்தி சத்ராஸ் என அழைப்பர்.
ஒல்லாந்தக் கோட்டை
[தொகு]தற்போதுள்ள இந்தக் கடலோர நகரத்தை, 17ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்து நாட்டினர் நிறுவினர். அவர்கள் வணிக நோக்கத்துக்காகப் பெரிய கோட்டை ஒன்றை இங்கே கட்டினர். மிகப் பெரிய தானியக் கிடங்குகள், குதிரை லாயங்கள், யானைகளைக் கட்டுவதற்கான அமைப்புக்கள் போன்றவை இக்கோட்டைக்குள் இருந்தன. ஆனால் இவற்றுள் ஒன்று மட்டுமே இன்று காணப்படுகிறது. பெரிய மதில்களைக் கொண்டிருந்த இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் 1818 ஆம் ஆண்டு போரில் கைப்பற்றினர்.[1] தற்போது, இந்த கோட்டை இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.சதுரங்கப் பட்டினக் கோட்டையில் 1620க்கும் 1769க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகிய வேலைப்பாடுகளுடைய சமாதிகளுடன் கூடிய இடுகாடு ஒன்றும் உள்ளது.[2] 2003ம் ஆண்டுக்குப் பின்னர் இக்கோட்டையில் பெரிய அளவில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வேலைகள் பல தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கும் வழி சமைத்தன.[3] விசயநகரப் பேரரசுக் காலத்தில் இங்கே துறைமுகம் ஒன்று இருந்ததற்கான சான்றுகளும் ஆய்வுகளின் ஊடாகக் கிடைத்துள்ளன.[4]
சதுரங்கப்பட்டினப் போர்
[தொகு]சதுரங்கப்பட்டினப் போர் அமெரிக்க விடுதலைப் போரின் போது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அட்மிரல் சர் எட்வர்ட் ஹியூஸ் என்பவரின் கீழான பிரித்தானியக் கப்பற்படைக்கும் பெய்லி டி சப்ரன் என்பவரின் கீழான பிரஞ்சு கடற்படைக்கும் இடையே நடந்தது. பெரும்பாலும் இப்போர் வெற்றி தோல்வியின்றியே முடிந்தபோதும், 17 பிப்ரவரி 1782 அன்று நடைபெற்ற இப்போரில் பிரித்தானியக் கப்பற்படை மிகவும் சேதம் அடைந்தது.
காட்சியகம்
[தொகு]சதுரங்கப்பட்டினக் கோட்டையில், பல ஓவியங்களும், அழகிய வேலைப்பாடுகளுடைய சமாதிகளும், ஸ்தூபங்களும் உள்ளன.
References
[தொகு]- ↑ Hussain Kodinhi (February 25, 2012). "Sadras cries for attention". Times of India. Chennai. pp. 10.
- ↑ ANUSHA PARTHASARATHY (June 14, 2012). "Sadras musings". Times of India. பார்க்கப்பட்ட நாள் June 25, 2012.
- ↑ T.S. SUBRAMANIAN Photographs: K. Gajendran (10 May 2003–23). "Unravelling a Dutch past". Frontline 20 (10). http://www.flonnet.com/fl2010/stories/20030523000106500.htm.
- ↑ நரசய்யா, கடல்வழிவணிகம்