சதுரங்கக் கலைச்சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவாகப் பயன்படுத்தப்படும் சதுரங்கக் கலைச்சொற்கள் (Glossary of chess) இங்குத் தமிழ் அகர வரிசையில் பட்டியலிடப்படுகின்றன. அவற்றுக்கு இணையான ஆங்கிலச் சொற்களும் தரப்பட்டுள்ளன. இவற்றுள் சிலவற்றுக்குத் தனிப்பக்கங்கள் காணப்படுகின்றன.

[தொகு]

அமைச்சர்[தொகு]

பார்க்க: அமைச்சர் (bishop)

அரசி[தொகு]

பார்க்க: அரசி (queen)

அலெக்கைனின் துமுக்கி[தொகு]

இரண்டு கோட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டு, அதன் அடியில் அரசி செங்குத்தாக அடுக்கப்படும் அமைப்பானது அலெக்கைனின் துமுக்கி (Alekhine's gun) எனப்படும்.[1]

[தொகு]

இயற்கணிதக் குறிமுறை[தொகு]

இயற்கணிதக் குறிமுறை (algebraic notation) என்பது சதுரங்கத்தில் நகர்த்தல்களைப் பதியவும் விளக்கவும் பயன்படுத்தும் சீர்தரமான முறையாகும். இக்குறிமுறையில் சதுரங்கப் பலகையிலுள்ள கட்டங்கள் ஆள்கூற்று வடிவில் பெயரிடப்படும்.[2]

இலக்குச் செருகி[தொகு]

செருகியாகச் சிக்கியுள்ள காய் அரசருக்குக் கவசமாக நின்று, அவரைக் காப்பாற்றுவதாக இருந்தால், அது இலக்குச் செருகி (absolute pin) என்று குறிப்பிடப்படுகிறது. இச்சூழலில், சிக்கியுள்ள காயை வேறு இடத்திற்கு நகர்த்த முடியாது. ஏனெனில், அதனை நகர்த்தினால், அரசர் முற்றுகைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.[3]

[தொகு]

ஒத்திவைப்பு[தொகு]

பிறகு ஆடுவதற்காகச் சதுரங்க ஆட்டத்தை நிறுத்தி வைத்தல், ஒத்திவைப்பு (adjournment) எனப்படும்.[4]

கா[தொகு]

காலாள்[தொகு]

பார்க்க: காலாள் (pawn)

கு[தொகு]

குதிரை[தொகு]

பார்க்க: குதிரை (knight)

கோ[தொகு]

கோட்டை[தொகு]

பார்க்க: கோட்டை (rook)

து[தொகு]

துடி[தொகு]

  1. குறிப்பிட்ட அளவு கட்டங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது அடுத்த நகர்த்தலுக்கு ஏற்றதாகக் குறிப்பிட்ட அளவு கட்டங்களைக் கொண்டுள்ள காய் துடிக் (active) காய் எனப்படும்.[5]
  2. அச்சுறுத்தல்களையும் எதிர்த்தாக்குதல்களையும் மேற்கொள்ளும் தற்காப்பு முறை, துடித் (active) தற்காப்பு எனப்படும்.[6]

[தொகு]

நடுக்காலாள்[தொகு]

அரசரின் நிரலிலோ (ஈ-நிரல்) அரசியின் நிரலிலோ (தீ-நிரல்) அமைந்துள்ள காலாள், நடுக்காலாள் (central pawn அல்லது center pawn) எனப்படும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lubomir Kavalek (31 சனவரி 2015). "Magnus Carlsen and a Parade of Chess Champions". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Chess. Ioss, Llc. பக். 14. 
  3. Braj Raj Kishore (2008). Chess For Pleasure. Diamond Pocket Books (P) Ltd.. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788128804885. 
  4. "Laws of Chess: For competitions starting on or after 1 July 2014". World Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. James Eade (2011). Chess For Dummies. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118162361. https://archive.org/details/chessfordummies0000eade_o8l3. 
  6. Eric Schiller (2003). Encyclopedia of Chess Wisdom, 2nd Edition. Simon and Schuster. பக். 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781580420884. 
  7. Bruce Pandolfini (1992). Pandolfini's Chess Complete: The Most Comprehensive Guide to the Game, from History to Strategy. Simon and Schuster. பக். 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780671701864. https://archive.org/details/pandolfinischess0000pand. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கக்_கலைச்சொற்கள்&oldid=3582576" இலிருந்து மீள்விக்கப்பட்டது