சதுப்பு நிலக் காடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சதுப்பு நிலக் காடுகள் கடல் ஓதங்களால் சதுப்பு நிலமாக உள்ள பகுதிகளில் அடா்ந்து காணப்படுகின்றன. இங்கு மரங்களின் தண்டுகள் பக்கவேர்களால் தாங்கப்படுகின்றன இவ்வேர்கள் வெள்ள காலங்களில் நீாில் முழ்கியும் வெள்ளம்மற்ற காலங்களில் இவ்வேர்கள் வெளியில் தெறியுமாறும் காணப்படும் இத்தகைய வேர் அமைப்பினால் தான் இம்மரங்கள் வெள்ள அரிப்பினால் விழுந்து விடாமல் நிற்கின்றன

இச்சதுப்பு நிலக் காடுகள் இந்தியாவில் கிழக்குக் கடற்கரையில் கங்கை மகாநதி கோதாவாி கிருஸ்ணா காவோி ஆகிய நதிகளின் டெல்டாப் பகுதிகளில் காணப்படுகின்றன. இம்மரங்கள் உறுதியானதும் நீடித்து உழைக்கக் கூடியதுமாயிருப்பதால் படகுகள் கட்டப்பயன்படுகின்றன இதில் காணப்படும் முக்கிய மரங்கள் காா்சன், கிண்டால் ஆகும்


சான்று[தொகு]

தமிழ்நாட்டு பாடநுால் கழகம் சென்னை 600 006 மேல் நிலை இரண்டாமாண்டு புவியியல் பாடநுால்