உள்ளடக்கத்துக்குச் செல்

சதீசு மகானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதீசு மகானா
18ஆவது- உத்தரப் பிரதேச சட்டப் பேரவை சபாநாயகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 மார்ச் 2022
துணைகாலியிடம்
முன்னையவர்அரிதே நாராயணன் தீக்சித்
பதவியில்
19 மார்ச் 2017 – 25 மார்ச் 2022
முன்னையவர்அகிலேஷ் யாதவ்
பின்னவர்நந்த கோபால் குப்தா
காதி, கிராமத் தொழில்கள், பட்டுவளர்ப்பு, ஜவுளி ஏற்றுமதி துறை அமைச்சர்
உத்தரப் பிரதேச அரசு
பதவியில்
17 சூன் 2019 – 21 ஆகத்து 2019
முன்னையவர்சத்தியதேவ் பாச்சூரி
பின்னவர்சித்தார்த் நாத் சிங்
நகர்புற மேம்பாடு
உத்தரப் பிரதேச அரசு
பதவியில்
23 அக்டோபர் 1997 – 8 மார்ச் 2002
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2012
முன்னையவர்புதிய தொகுதி
தொகுதிமகாராஜ்பூர்
பதவியில்
1991–2012
முன்னையவர்கணேசு தீக்சித்
பின்னவர்இரகுநந்தன் சிங் பாதுரியா
தொகுதிகான்பூர் பாளையம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 அக்டோபர் 1960 (1960-10-14) (அகவை 65)
கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
அனிதா மகானா (தி. 1981)
பிள்ளைகள்2
கல்விசத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்.)
இணையத்தளம்www.satishmahana.net
மூலம்: [1]

சதீசு மகானா (Satish Mahana; பிறப்பு அக்டோபர் 14,1960) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தற்போது, இவர் 2022 முதல் உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் 18ஆவது சபாநாயகராக பணியாற்றி வருகிறார். இவர் எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 11ஆவது சட்டமன்றத்திலிருந்து பணியாற்றியுள்ளார். முன்பு கான்பூர் கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தற்போது கான்பூரின் மகாராஜ்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார். 2009ஆம் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கான்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். உத்தரப்பிரதேசத்தின் 16ஆவது சட்ட சபையில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்த இவர், கான்பூர் பூர்வோத்தர் மாவட்டத்தில் உள்ள விசுவ இந்து பரிசத் பஜ்ரங் தள் இளைஞர் பிரிவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

மகானா 1960 அக்டோபர் 14 அன்று உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் இராம் அவதார் மகானாவுக்கு மகனாக ஓர் இந்து கத்ரி குடும்பத்தில் பிறந்தார். 1981ஆம் ஆண்டில் இவர் அனிதா என்பாரை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகன் கரண் மகானா மற்றும் ஒரு மகள் நேகா உள்ளனர். கான்பூரில் உள்ள தூய ஜோசப் மூத்தோர் மேனிலைப் பள்ளியில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.[2][3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

மகானா 8ஆவது முறையாக உ. பி. யின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். மகானா தொடர்ச்சியாக 8ஆவது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1997 அக்டோபர் 27 முதல் 2002 மார்ச் 8 வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார். இவரது நல்ல பணியின் காரணமாக இவருக்கு மீண்டும் வீட்டுவசதியுக்கான இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2012க்குப் பிறகு, இவர் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகர் மாவட்டத்தின் மகாராஜ்பூர் (உத்தரப்பிரதேச சட்டமன்றத் தொகுதி) தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2017 தேர்தலில், இவர் தனது நெருங்கிய போட்டியாளரான பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மனோஜ் குமார் சுக்லாவை 91,826 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]

மார்ச் 2017இல், இவர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[6] உத்தரப்பிரதேச அரசில் தொழில்துறை மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்றார்.

2025ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற 14ஆவது பாரதிய சத்ரா சன்சாத்தில் இவருக்கு சிறந்த சட்டமன்ற சபாநாயகர் விருது வழங்கப்பட்டது.[7]

வகித்தப் பதவிகள்

[தொகு]
# முதல் வரை பதவி கருத்துக்கள்
01 மார்ச் 2022 பதவியில் சட்டப்பேரவை சபாநாயகர்
02 மார்ச் 2022 பதவியில் உறுப்பினர், 18வது சட்டமன்றம்18வது சட்டப்பேரவை
03 மார்ச் 2017 மார்ச் 2022 தொழில்துறை மேம்பாட்டுக்கான அமைச்சரவை அமைச்சர் [8] முதல் முறையாக யோகி ஆதித்யநாத் அமைச்சராக பதவியேற்றார்.
04 மார்ச் 2017 மார்ச் 2022 17வது சட்டப்பேரவை
05 மார்ச் 2012 மார்ச் 2017 16வது சட்டப்பேரவை
06 மே 2007 மார்ச் 2012 15வது சட்டப்பேரவை
07 பிப்ரவரி 2002 மே 2007 14வது சட்டப்பேரவை
08 அக்டோபர் 1997 மார்ச் 2002 வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்
09 1996 2002 13வது சட்டப்பேரவை
10 1993 1995 12வது சட்டப்பேரவை
11 1991 1992 11வது சட்டப்பேரவை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Would withdraw my name if BJP fields Joshi from Kanpur: Mahana". Zee News. 10 March 2014. https://zeenews.india.com/news/uttar-pradesh/would-withdraw-my-name-if-bjp-fields-joshi-from-kanpur-mahana_917009.html. 
  2. "Candidate affidavit". Myneta.info. Retrieved 3 September 2019.
  3. "Member Profile". Official website of Legislative assembly of Uttar Pradesh. Retrieved 3 September 2019.
  4. "Maharajpur (Uttar Pradesh) Election Results 2017". Election.in. Retrieved 3 September 2019.
  5. "Maharajpur Assembly Constituency Election Result". Result University. Retrieved 3 September 2019.
  6. "UP Minister to inspect Noida 200 office, administer cleanliness pledge", Hindustan Times, 26 March 2017
  7. "Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in. Retrieved 2025-05-27.
  8. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதீசு_மகானா&oldid=4463816" இலிருந்து மீள்விக்கப்பட்டது