சதீசு கௌசிக்
சதீசு கௌசிக் (ஆங்கிலம் :Satish Kaushik ) இவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் மற்றும் நடிகருமாவார். முக்கியமாக இந்தி திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் இவர் பங்கேற்றுள்ளார். ஒரு திரைப்பட நடிகராக, மிஸ்டர் இந்தியா என்றத் திரைப்படத்தில் காலெண்டர் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக குறிப்பிடப்படுகிறார்.[1] தீவானா மஸ்தானா என்ற திரைப்படத்தில் பப்பு பேஜர், மற்றும் சாரா கவ்ரோனின் பிரித்தன் திரைப்படமான பிரிக் லேன் (2007) என்பதில் "சானு அகமது" என்ற பாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் இரண்டு முறை பிலிம்பேர் வழங்கிய சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை 1990 இல் ராம் லக்கனுக்காகவும் 1997 இல் சாஜன் சலே சசுரலுக்காகவும் வென்றுள்ளார்.
ஒரு நாடக நடிகராக, அவரது மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரம் ஆர்தர் மில்லரின் டெத் அன்ட் சேல்ஸ்மேன் என்ற மேடை நாடகத்தின் தழுவலான சேல்ஸ்மேன் ராம்லால் என்ற இந்தி மொழி நாடகத்தில் "வில்லி லோமன்" என்ற பாத்திரமாகும்.[2] குந்தன் சாவின் நகைச்சுவைப் படமான ஜானே பி தோ யாரோன் (1983) என்றப் படத்திற்காக உரையாடல்களை எழுதியுள்ளார். உருஸ்லான் மும்தாஜ் மற்றும் சீனா சாகாபாதி நடித்த அவரது தேரீ சங் என்றத் திரைப்படம் இளம் வயது கர்ப்பத்தின் சிக்கல்களை ஆராய்கிறது.
சுயசரிதை
[தொகு]தொழில்
[தொகு]மாதூம் (1983) என்ற இந்தித் திரைப்படத்தில் சேகர் கபூருக்கு உதவி இயக்குநராக சதீசு கௌசிக் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த படத்தில் ஒரு நடிகராகவும் நடித்துள்ளார். அதே ஆண்டில் வெளிவந்த உன்னதமான நையாண்டித் திரைப்படமான ஜானே பி தோ யாரோன் என்பதில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் அப்படத்தின் உரையாடல்களையும் எழுதினார். மேலும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் என்.எஸ்.டி இரண்டிலும் தனது கல்லூரியின் முன்னாள் மாணவர்களுடன் மீண்டும் இணைந்தார். இயக்குனராக அவரது முதல் படம் ஸ்ரீதேவியின் ரூப் கி ராணி சோரோன் கா ராஜா (1993) என்பதாகும். அவரது இரண்டாவது இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் பிரேம் (1995), இது நடிகை தபுவிற்கு தொடக்கப் படமாக கருதப்பட்டது. இரண்டுமே திரையரங்கில் மோசமான வசூலைக் கொண்டிருந்தது.[3] அவர் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரித்து வந்தார். மேலும் 1999 ஆம் ஆண்டில் ஹம் ஆப்கே தில் மெய்ன் ரெஹ்தே ஹைன் என்ற படத்தின் மூலம் தனது முதல் வெற்றியைப் பெற்றார்.
அனில் கபூர் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோருடன் இணைந்து மிஸ்டர் இந்தியா என்ற வெற்றிப் படத்தில் "காலண்டர்" என்ற பாத்திரத்தில் அவர் நன்கு அறியப்பட்டார். அவரது நண்பர் டேவிட் தவான் இயக்கிய தீவானா மஸ்தானா (1997) என்ற நகைச்சுவை படத்தில் "பப்பு பேஜர்" என்ற கதாபாத்திரத்துக்காகவும் அவர் புகழ் பெற்றார். பிலிப்ஸ் டாப் டென் என்ற தொலைக்காட்சி கவுண்டவுன் நிகழ்ச்சியை அவர் இணைந்து எழுதி தொகுத்து வழங்கினார். இதற்காக அவர் ஸ்கிரீன் வீடியோகான் விருதை வென்றார். 2005 கௌசிக் அர்ஜுன் ராம்பால், அமீஷா பட்டேல் மற்றும் சயீத் கான் போன்ற நடிகர்களை இயக்கியுள்ளார்.
வணிகம்
[தொகு]சண்டிகர் திரைப்பட நகரத் திட்டத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான பார்சவ்நாத் டெவலப்பர்களுடன் சதீஷ் கௌசிக் ஒரு பங்குதாரராக இருந்தார். சண்டிகரின் சாரங்பூர் கிராமத்தில் 30 ஏக்கர் (12 ஹெக்டேர்) குறைந்த விலையில் வாங்கினர். ஊடகங்கள் இந்த மோசமான நாடகத்தை அம்பலப்படுத்திய பின்னர் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த பல லட்சக்கணக்கான திட்டத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[4]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Movie Talkies". பார்க்கப்பட்ட நாள் 5 December 2016.
- ↑ "An Interview with Satish Kaushik", of Brick Lane, Indie London
- ↑ "Interview with Satish Kaushik' பரணிடப்பட்டது 2008-04-22 at the வந்தவழி இயந்திரம், The Tribune, 7 December 2003
- ↑ "Satish Kaushik Tries to Save Parsavnath from Penalty in Chandigarh Film City project", Merachanigar