சதி அகல்யா
சதி அகல்யா | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | மோடேர்ன் தியேட்டர்ஸ் |
இசை | ஆர். பாலுசாமி |
நடிப்பு | எஸ். டி. சுப்பையா டி. எம். சங்கரன் எஸ். வி. தாத்தாச்சாரி தவமணி தேவி துளசி தாஸ் எஸ். எஸ். சகுந்தலா |
வெளியீடு | மார்ச்சு 10, 1937 |
ஓட்டம் | . |
நீளம் | 14000 அடி |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சதி அகல்யா 1937 ஆம் ஆண்டு, மார்ச்சு 10 இல் வெளிவந்த 14,000 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். மோடேர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனம் தயாரித்து டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, டி. எம். சங்கரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
உப தகவல்[தொகு]
- இப்படத்தைத் தயாரித்த, மோடேர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனத்திற்கு இது முதல் படமாகும்.[1]
- பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையும், பாடகியுமான யூ. ஆர். ஜீவரத்தினம், இப்படம் மூலம்தான் தமது திரைப்பட வாழ்க்கை தொடங்குகினார். மேலும், அவர் தன் முதல் பாடலைப் இந்தப் படத்தில்தான் பாடினார்.[1]
- மோடேர்ன் தியேட்டர்ஸ் வாயிலாக, டி. ஆர். சுந்தரம் எடுத்த முதல் படம் ‘சதி அகல்யா’. இந்தப் படத்துக்குக் கதாநாயகியை டி. ஆர். சுந்தரம் தேர்வு செய்தது யாழ்ப்பாணத்தில் பிறந்து வசதியாக வளர்ந்திருந்த தவமணி தேவி.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails8.asp. பார்த்த நாள்: 2016-10-27.
- ↑ "அனுபவம் புதுமை". http://karundhel.com/2015/01/item-girls-in-tamil-cinema.html.