சதிர்க்குரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதிர்க்குரு
Sunburn
சிறப்புதோல் மருத்துவம்

சதிர்க்குரு (Sunburn) என்பது சூரிய கதிர் வீச்சினால் ஏற்படும் எரிப்பின் வடிவமாகும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் தோலின் உயிருள்ள இழையங்கள் பாதிக்கப்படுவதால் இது ஏற்படுகின்றது. சதிர்க்குருவின் பொதுவான அறிகுறிகளாவன தோல் சிவத்தல், சிவந்த தோலை தொடும் போது சூடாக அல்லது வலியை ஏற்படுத்தும், சோர்வு, லேசான தலைச்சுற்றல் என்பனவாகும். அதிகப்படியான புற ஊதா கதிர்வீச்சு தாக்கம் தீவிர நிகழ்வுகளில் உயிருக்கு ஆபத்தானது. மேலும் அதிகப்படியான புற ஊதா கதிர்வீச்சு வீரியம் இல்லாத வேனல் கட்டிகளுக்கு முக்கிய காரணமாகும்.[1] [2]சூரியக் கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாக சருமத்தை தாக்கும் போது புற ஊதா கதிர்வீச்சினால் சருமத்தின் செல்களில் உள்ள டிஎன்ஏக்கள் சேதமடைகின்றன. வெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் தாக்கங்களை தடுக்க சன்ஸ்கிரீன் களிம்புகள் மற்றும் சூரிய பாதுகாப்பு உடைகள் என்பன பரவலாக பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகும்.

அறிகுறிகள்[தொகு]

சதிர்க்குருவினால் ஏற்பட்டுள்ள கொப்புளங்கள்

தோல் சிவத்தல் மற்றும் மாறுபட்ட அளவிலான வலி என்பன பொதுவான அறிகுறிகள் ஆகும். கொப்புளம், வீக்கம், அரிப்பு, தோலுரிதல், சொறி, குமட்டல் , காய்ச்சல், குளிர், மயக்கம் ஆகியவை பிற அறிகுறிகளில் அடங்கும். சிறிய அளவிலான சதிர்க்குரு பாதிக்கப்பட்ட பகுதிகளில் லேசான சிவத்தலை தவிர வேறொன்றையும் ஏற்படுத்தாது. கடுமையான தாக்கங்களின் போது கொப்புளங்கள் ஏற்படலாம். இவை வலி மிகுந்ததாக இருப்பதுடன் மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படலாம்.[3]

சதிர்குரு பாதுகாப்பு இல்லாமல் 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திலும் புற ஊதா கதிர் தாக்கத்திற்கு உட்படும் போதும் ஏற்படலாம். ஆயினும்கூட, ஏற்படுத்தப்பட்ட தீங்கு பெரும்பாலும் உடனடியாகத் தெரியாது. வெளிப்பாட்டிற்குப் பிறகு, தோல் 30 நிமிடங்களுக்குள் சிவப்பு நிறமாக மாறக்கூடும். பெரும்பாலும் 2 முதல் 6 மணி நேரம் எடுக்ககூடும். வெளிப்பாட்டிற்குப் பிறகு, தோல் 30 நிமிடங்களுக்குள் சிவப்பு நிறமாக மாறக்கூடும், ஆனால் பெரும்பாலும் 2 முதல் 6 மணி நேரம் ஆகும். வலியின் தீவிரம் பொதுவாக 6 முதல் 48 மணி நேரத்திற்குப் பிறகு அதிகரிக்கலாம். வெப்பப் புண்களினால் 3 - 8 நாட்களின் போது தோலுரிதல் ஏற்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் தோல் உரிதல், அரிப்பு என்பன பல வாரங்களுக்கு தொடரலாம்.

புற ஊதா கதிர்வீச்சு சதிர்க்குருவிற்கு காரணமாகிறது மற்றும் மெலனோமா, பாசல்-செல் கார்சினோமா, ஸ்குவாமஸ்-செல் கார்சினோமா ஆகிய மூன்று வகையான தோல் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றது.[1][2][4]

காரணங்கள்[தொகு]

புற ஊதா கதிர்கள் சூரிய ஒளி மற்றும் புளோரோளிர்வு விளக்குகள், புற ஊதா கிருமி நாசினி கதிர்வீச்சு, பிற செயற்கை மூலங்களில் இருந்தும் வெளியாகின்றன. சதிர்குரு ஏற்படுவதில் தோலின் வகைகளும் செல்வாக்கு செலுத்துகின்றன. கதிர்வீச்சின் தாக்கம் வெளிறிய தோலை கொண்டவர்களுக்கு அதிகமாகவும், கரு நிற தோலை கொண்டவர்களுக்கு குறைவாகவும் பாதிக்கும். இருப்பினும், அனைத்து தோல் வகைகளும் சதிர்க்குருவை உருவாக்கலாம்.[5]

  • வகை I: வெளிறிய வெள்ளை தோல், எளிதில் எரியும்.
  • வகை II: வெள்ளை தோல், எளிதில் எரியும்.
  • வகை III: வெள்ளை தோல், எரியக்கூடும்.
  • வகை IV: வெளிர் பழுப்பு / ஆலிவ் தோல், அரிதாக எரியும்.
  • வகை V: பழுப்பு தோல், பொதுவாக எரியாது.
  • வகை VI: கருப்பு தோல், எரியும் சாத்தியம் மிக குறைவு.[6]

புற ஊதா கதிர்வீச்சினால் கருமையாகிறது. தோலில் சூரியக் கதிர்களின் தாக்கமானது வயதிலும் தங்கியிருக்கின்றது. தோலில் சூரியக் கதிர்களின் தாக்கமானது வயதிலும் தங்கியிருக்கின்றது. ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் அறுபது வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் சூரிய ஒளியை அதிகம் உணர்கிறார்கள்.[7]

சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வாய்வழி கருத்தடை மருந்துகள், ஆண்டிடிரஸன்ட்கள், முகப்பரு மருந்துகள் போன்றன சதிர்க்குருக்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.[8]

தடுக்கும் முறைகள்[தொகு]

சதிர்க்குருவை தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி, சருமத்தை அடையும் புற ஊதா கதிர்வீச்சின் அளவைக் குறைப்பதாகும். உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கன் அகாடமி ஒப் டெர்மட்டாலஜி மற்றும் தோல் புற்றுநோய் அறக்கட்டளை ஆகியவை அதிகப்படியான புற ஊதா வெளிப்பாடு மற்றும் தோல் புற்றுநோயைத் தடுக்க பின்வரும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கின்றன:[9][10][11]

  • புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையான நேரத்தில் நேரடியாக சூரிய கதிர் வீச்சில் இருப்பதை முடியுமானவரை தவிர்த்தல்.
  • புற ஊதா கதிர்கள் மிகவும் தீவிரமாக இருக்கும்போது நிழலில் இருத்தல்.
  • தொப்பி, குளிர்கண்ணாடி மற்றும் இறுக்கமாக நெய்த, தளர்வான ஆடைகள் உள்ளிட்ட சூரிய பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும்.
  • சன்ஸ்கிரீன் பயன்படுத்தல்.
  • புற ஊதா கதிர்களை வெளியேற்றும் செயற்கை மூலங்களை தவிர்த்தல்.

சிகிச்சைகள்[தொகு]

சதிர்க்குருவினால் சரும நிற மாற்றம்

சதிர்க்குருக்கான முதன்மை சிகிச்சை நடவடிக்கையானது சூரியனுக்கு மேலும் வெளிப்படுவதைத் தவிர்ப்பது. இவை பெரும்பாலும் சில வாரங்களுக்குள் முழுமையாக குணமாகும்.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி சதிர்க்குருக்கு சிகிச்சையளிக்க பின்வருவனவற்றை பரிந்துரைக்கிறது:[12]

  • அடிக்கடி குளிர் நீரில் குளியலானது வலி நிவாரணத்திற்கு ஏற்றது.
  • கற்றாழை அல்லது சோயாவைக் கொண்டிருக்கும் மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தல்
  • இப்யூபுரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகள் வலிக்கு உதவும்.
  • அதிக தண்ணீர் அருந்துதல்.
  • சதிர்க்குருவினால் கொப்புளங்களை உடைக்க கூடாது. அவை குணமடைய விட வேண்டும்.
  • சதிர்க்குருவினால் பாதிக்கப்பட்ட பகுதியை மேலும் சேதத்தைத் தடுக்க வகையில் வெளியில் செல்லும் போது தளர்வான ஆடைகள் அணிந்து பாதுகாக்கவும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குளிர்ந்த மற்றும் ஈரமான துணிகளைப் பயன்படுத்துவது சதிர்க்குருவினால் ஏற்படும் அசௌகரியத்திற்கு உதவக்கூடிய வீட்டு சிகிச்சை ஆகும்.[13] பாதிக்கப்பட்ட பகுதிகளில் கற்றாழையை கொண்ட லோஷன்களை பயன்படுத்துவதை பல ஆய்வுகள் பரிந்துரைத்தாலும்,[14][15]கற்றாழை எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் கண்டறிந்துள்ளனர். சோயாவைக் கொண்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது மற்றுமொரு வீட்டு சிகிச்சையாகும். தோலின் மேற்பரப்பிலும், உடலிலும் நீரிழப்பைத் தடுக்க அதிகமாக நீர் அருந்துதல் பரிந்துரைக்கப்படுகிறது.[16]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Do sunscreens prevent skin cancer". Archived from the original on 2006-11-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 "Solar and ultraviolet radiation" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "How to treat sunburn". www.aad.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
  4. "Sunburn". The Skin Cancer Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
  5. Wolff K, Johnson R, Saavedra A (2013). Fitzpatrick's color atlas and synopsis of clinical dermatology (7th ed.). New York: McGraw-Hill Medical. ISBN 978-0-07-179302-5. OCLC 813301093.
  6. Wolff, Klaus; Johnson, Richard Allen; Saavedra, Arturo P.; Roh, Ellen K. (2017), "PHOTOSENSITIVITY, PHOTO-INDUCED DISORDERS, AND DISORDERS BY IONIZING RADIATION", Fitzpatrick's Color Atlas and Synopsis of Clinical Dermatology (8 ed.), McGraw-Hill Education, பார்க்கப்பட்ட நாள் 2019-10-16
  7. "Sunburn: Causes, Symptoms, and Treatment". WebMD (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
  8. "Fact Sheets > Health Topics > Avoiding Sun-Related Skin Damage". web.archive.org. 2008-05-16. Archived from the original on 2008-05-16. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  9. "WHO | Sun protection". WHO. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
  10. "Skin Cancer Prevention". The Skin Cancer Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
  11. "Prevent skin cancer". www.aad.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
  12. "How to treat sunburn". www.aad.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
  13. "The Olympic textbook of medicine in sport". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  14. Maenthaisong R, Chaiyakunapruk N, Niruntraporn S, Kongkaew C (September 2007). "The efficacy of aloe vera used for burn wound healing: a systematic review". Burns. 33 (6): 713–8. doi:10.1016/j.burns.2006.10.384. PMID 17499928.
  15. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6017010/
  16. "How to treat sunburn". www.aad.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதிர்க்குரு&oldid=3552805" இலிருந்து மீள்விக்கப்பட்டது