உள்ளடக்கத்துக்குச் செல்

சதியா காத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதியா காத்ரி (Sadia Khatri உருது : du کھتری) ஒரு பாக்கித்தான் எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் மற்றும் கராச்சியைச் சார்ந்த பெண்ணியவாதி ஆவார். இவர் டான் (நாளிதழ்) மற்றும் தி காத்மாண்டு போஸ்ட்டில் பத்திரிகையாளராகவும், பேப்பர்கட்ஸ் இதழில் அறிக்கை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். [1] தாபாக்களில் பெண்ணியக் கூட்டுப் பெண்களின் நிறுவனர்களில் கத்ரியும் ஒருவர் ஆவார் . [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

சதியா காத்ரி அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் பட்டம் பெற்றார். [3] இவர் ஒரு வானியல் மற்றும் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்றார். பின்னர் பத்திரிகை மற்றும் ஊடக ஆய்வுகளிலும் கற்றல் பணியினை மேற்கொண்டார். [4]

அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்பு, கத்ரி புகைப்படம் எடுப்பதை ஒரு பொழுதுபோக்காகத் தொடர்ந்தார். கலை மற்றும் புகைப்படக்கலை மீதான இவரது ஆர்வம் கராச்சியின் கலை மற்றும் கலாச்சார காட்சியில் இருந்து துவங்கியது. இவர் பலமுறை மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் பயின்ற இவரது சகோதரி ஃபிசா காத்ரியுடன் இசை நிகழ்ச்சிகள், இலக்கிய விரிவுரைகள் மற்றும் சமூக கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். [5] யுஎஸ் வலைப்பதிவான " ஹ்யூமன்ஸ் ஆஃப் நியூயார்க் " போலவே, காத்ரி தனது கல்லூரி பட்டப்படிப்பு காலத்தில் "ஹியூமன்ஸ் ஆஃப் பயோனிர் வேலி (முன்னோடி பள்ளத்தாக்கின் மனிதர்கள்)" என்ற தலைப்பில் வலைப்பதிவினை உருவாக்கினார்.

2011 ஆம் ஆண்டில், கராச்சியின் வணிகப் பகுதிகளில் சாலையோரத்தில் தங்கள் பெரும்பாலான நேரத்தை செலவிடும் குழந்தைகளின் புகைப்படங்களை கத்ரி எடுத்தார். இந்த புகைப்படங்கள் கராச்சியில் ஒரு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு புகைப்படத்தின் அடியிலும், தங்கள் சொந்த வார்த்தைகளின் மூலம் வாழ்க்கையைப் பற்றிய தங்கள் முன்னோக்கைத் தெரிவிக்க தொடர்புடைய ஒரு மேற்கோள் இருந்தது. [6]

தொழில்

[தொகு]

அண்மையில் அறிவிக்கப்பட்ட ஜீனத் ஹாரூன் ரஷீத் பெண்களுக்கான சிறப்புப் பரிசு பெற்ற இவரது சுயசரிதைக் கட்டுரையான "ஃபியர் அண்ட் தெ சிட்டி (பயமும் நகரமும்)" என்ற கட்டுரையில், காத்ரி தனது சொந்த ஊரான கராச்சியில் பொது இடங்களை மீட்பதற்காக பயணம் மற்றும் போராட்டத்தின் மூலம் தனது விடுதலையைப் பற்றி விவரிக்கிறார். சமீபத்திய வெறுப்பு தாக்குதல் பற்றிய இவரது அனுபவத்துடன் அந்தப் படைப்பினை நிறைவு செய்துள்ளார். [7] [8]

இவர் டான் நாளிதழ் [9] மற்றும் தி ஃப்ரைடே டைம்ஸில் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார் . [10] இவர் ஒரு திரைப்பட விமர்சகராகவும் தனது பணியினை மேற்கொண்டுள்ளார். [11] மதிப்புமிக்க லோகார்னோ திரைப்பட விழாவில் இவர் விமர்சகரின் அகாதமியிலும் பங்கேற்றார். [12]

இவர், கரம் ஆண்டாயின் ஆள் கேர்ள் பேண்ட் இசைக்குழு பெண்ணிய கீதத்தின் இசை நிகழ்படத்திலும் நடித்தார். [13]

பெண்ணியம்

[தொகு]

தபாஸில் பெண்கள்

தாபாக்களில் பெண்ணியக் கூட்டுப் பெண்களின் நிறுவனர்களில் கத்ரியும் ஒருவர் ஆவார்[14][15][16][17] நடுத்தர மற்றும் உயர் வகுப்பு பெண்களின் அன்றாட பிரச்சினைகளை சரி செய்யும் பொருட்டு இது உருவானது, இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் மற்றும் தகுந்த காரணமின்றி தனியாக வெளியே செல்ல முடியாது. இது காத்ரி வீட்டில், இவரும் அனுபவித்த வன்முறையைப் பற்றி சிந்திக்க வழிவகுத்தது, [18] [19]

இவுரத் அணிவகுப்பு

2018 இல் இவுரத் மார்ச் (பெண்கள் அணிவகுப்பு) க்கான ஏற்பாட்டுக் குழுவின் ஒரு பகுதியாக காத்ரி இருந்தார்.[20][21][22]

சான்றுகள்

[தொகு]
  1. "Meet the Team". DWL (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-10.
  2. "Meet Sadia Khatri: Karachis Chai Rebel". 12 October 2017. https://dailytimes.com.pk/124372/sadia-khatri-karachis-chai-rebel/. 
  3. Advancement, M. H. C. "From MHC chai groups to #DhabaForWomen". blog.mtholyoke.edu (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-05-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  4. Inayat, Naila. "Women in Pakistan just want to have fun -- like the men". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-21.
  5. "Top Student Artists Reunite to Create Their Own Show". Office of News & Media Relations | UMass Amherst (in ஆங்கிலம்). Archived from the original on 2020-11-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  6. Newspaper, the. "Exhibition on impact of violence opens" (in en). https://www.dawn.com/news/658577. 
  7. "NEWS AND RESULTS 2019". ZHR WRITING PRIZE (in ஆங்கிலம்).
  8. "2019 AWARD CEREMONY". ZHR WRITING PRIZE (in ஆங்கிலம்).
  9. "News stories for Sadia Khatri - DAWN.COM" (in en). https://www.dawn.com/authors/4935/sadia-khatri. 
  10. "Sadia Khatri". The Friday Times.
  11. "Pakistani Activist Gets Selected for Switzerland's Film Festival!". 24 July 2019. https://www.brandsynario.com/pakistani-activist-gets-selected-for-switzerlands-film-festival/. 
  12. "Sadia Khatri - Locarno Festival". Locarno Festival. Archived from the original on 10 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  13. Chaudhry, Amna (2018-11-15). "Garam Anday's new music video is an unapologetic celebration of female anger". Images (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-10.
  14. Amjad, Farah (20 March 2019). "Making #MeToo Work in Pakistan". The New Republic. https://newrepublic.com/article/153355/making-metoo-work-pakistan. 
  15. Sengupta, Anuradha (16 April 2016). "Feminism over chai" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/magazine/anuradha-sengupta-interviews-sadia-khatri-on-the-feminist-project-girlsatdhabas/article8479509.ece#!. 
  16. "How drinking tea became an act of female rebellion". September 6, 2015. https://www.bbc.com/news/av/magazine-34156413. 
  17. Sheikh, Imaan. "Here's Why South Asian Women Are Uploading Photos Of Themselves At Dhabas". BuzzFeed (in ஆங்கிலம்).
  18. "The cool girls of Pakistan". mid-day (in ஆங்கிலம்). 13 August 2015.
  19. Dixit, Shubhra (5 August 2015). "Gender: Hang Out With These Girls at Dhabas". TheQuint (in ஆங்கிலம்).
  20. "Global Voices - Aurat March (Woman March) Marks Resistance Against Misogyny in Pakistan" (in en). Global Voices. 11 March 2018. https://globalvoices.org/2018/03/11/aurat-march-woman-march-marks-resistance-against-misogyny-in-pakistan/. 
  21. "The 'womanspreading' placard that caused fury in Pakistan". BBC News. 5 April 2019. https://www.bbc.com/news/stories-47832236. 
  22. "In pictures: Aurat March brings together new sisterhood clan" (in en). www.thenews.com.pk. https://www.thenews.com.pk/latest/290314-in-pictures-aurat-march-brings-together-new-sisterhood-clan. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதியா_காத்ரி&oldid=3664124" இலிருந்து மீள்விக்கப்பட்டது