சதா நாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷதா நாசர்
பிறப்புமே 1, 1964 (1964-05-01) (அகவை 59)
ஏடன், தென் அரேபியா கூட்டமைப்பு (தற்போதைய யெமன்)
தேசியம்யேமனி
படித்த கல்வி நிறுவனங்கள்சார்லஸ் பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுநுஜூத் அலியின் வழக்கறிஞர்
விருதுகள்கிளாமர்' இதழின் ஆண்டின் சிறந்த பெச்சுக்கான விருது (நுஜூத் அலியுடன்)

ஷதா நாசர் (Shada Nasser, அரபு மொழி: شدا ناصر‎ ) (பிறப்பு மே 1, 1964 ஏடனில் ) என்பவர் யெமனின் முதல் பெண் வழக்கறிஞர் மற்றும் யெமன் நீதிமன்றங்களில் முகத்தை மறைக்காத முதல் பெண் வழக்கறிஞர் ஆவார். இவர் 1989 இல் பிராகா நகரின் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்துப் பட்டம் பெற்றார். அதன் பிறகு இவர் யெமனுக்குத் திரும்பினார். 1996 இல் இவர் தலைநகர் சனாவில் வேறு மூன்று பெண் வழக்கறிஞர்களுடன் இணைந்து மகளிர் மட்டும் சட்ட நிறுவனதை நிறுவினார். யெமனில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இவர் தனது பணியை அர்ப்பணித்துள்ளார்.

வழக்குகள்[தொகு]

நாசரின் வாடிக்கையாளர்களாக சனாவின் நடுவண் சிறையிலுள்ள பெண் கைதிகள் உள்ளனர். [1] 2005 ஆம் ஆண்டில், நாசர் ஒரு இளம் பெண் கைதிக்கு ஆதரவாக வந்தார். அவர் தன் கணவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் 16 வயது சிறுமியாக இருந்தபோதிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் காவலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி சிறையில் கர்ப்பமானார். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சனாதிபதியின் உத்தரவு சிறுமியின் உயிரைக் காப்பாற்றியது. [2]

இவர் யெமனில் நடக்கும் குழந்தை திருமணங்களை எதிர்ப்பவர். இவர் 2008 ஏப்ரலில் 10 வயதான நுஜூத் அலிக்காக வழக்காடினார். அவர் ஒரு நடுத்தர வயது ஆணிடமிருந்து மணமுறிவு கோரி மனு தாக்கல் செய்தார். அவருக்கு அதற்கு முந்தைய ஆண்டு அந்த ஆணுடன் அவரது குடும்பத்தினரால் திருமணம் செய்யயப்பட்டது. தான் பருவ வயதை அடையும் வரை தன்னுடன் உடலுறவு கொள்வதில்லை என்று திருமணத்துக்கு முன் சம்மதித்திருந்த போதிலும், தன் கணவர் தன்னை தொடர்ந்து அடித்தும், வண்கலவியில் ஈடுபட்டதாகவும் அலி கூறினார். சில வாரங்களில் நூஜூத் அலிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அந்த நேரத்தில் உலகின் இளைய வயதில் விவாகரத்து பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றார். [3] அலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு, யெமனில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட மற்ற பெண்களை விவாகரத்து பெற ஊக்குவித்தது. [1]

விருதுகள்[தொகு]

2008 ஆம் ஆண்டில், கிளாமர் பத்திரிக்கை அலியின் விவாகரத்து நடவடிக்கைகளில் இவர் முன்னின்று பணியாற்றியதற்காக, நாசர் மற்றும் நுஜூத் அலி ஆகியோருக்கு ஆண்டின் சிறந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் குரலுக்கான கிளாமர் விருதைப் அளித்தது. [4]

குறிப்புகள்[தொகு]

 

  1. 1.0 1.1 Sanaa's First Woman Lawyer
  2. Joshua Hersh (4 March 2010). "A Ten-Year-Old’s Divorce Lawyer". The New Yorker. http://www.newyorker.com/news/news-desk/a-ten-year-olds-divorce-lawyer. பார்த்த நாள்: 16 November 2016. 
  3. A Ten-Year-Old’s Divorce Lawyer
  4. Power, Carla (27 October 2008), Nujood Ali & Shada Nasser: The Voices for Children, Glamour, பார்க்கப்பட்ட நாள் 16 November 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதா_நாசர்&oldid=3312529" இலிருந்து மீள்விக்கப்பட்டது