சதாஷிவ் அம்ராபுர்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதாஷிவ் அம்ராபுர்கர்
பிறப்பு11 மே 1950[1]
அகமத்நகர், பாம்பே மாநிலம், இந்தியா
இறப்பு3 நவம்பர் 2014(2014-11-03) (அகவை 64)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1979–2014
வாழ்க்கைத்
துணை
சுனந்தா (தி. 1973)
விருதுகள்1983இல் அர்த் சத்யா படத்துக்காக சிறந்த துணை நடிகர் பிலிம்பேர் விருது, 1991இல் சதக் படத்தில் எதிர் நாயகனாக நடித்ததற்காக பிலிம்பேர் விருது

சதாஷிவ் தத்தாத்ரே அம்ராபுர்கர் (Sadashiv Dattaray Amrapurkar) (11 மே 1950 - 3 நவம்பர் 2014) இந்தியாவைச் சேர்ந்த இவர் பல்துறை நடிகரும், இயக்குனரும், எழுத்தாளரும் ஆவார். 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராத்தி மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வந்தார்.[2]

1991 ஆம் ஆண்டில் சதக் என்ற படத்துக்காக ஒரு எதிர்மறை பாத்திரத்தில் நடித்து நடிப்பிற்கான பிலிம்பேர் விருதைப்பெற்றார். இவ்விருது முதல் முறையாக விருது வழங்கப்பட்டது. எதிர்மறை வேடங்களுக்கு மேலதிகமாக, இவர் துணை வேடங்களிலும், பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்தார். முதல் வகுப்பு துடுப்பாட்டத்தில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

சதாஷிவ் அம்ராபுர்கர் 1950 மே 11 அன்று இந்தியாவின் மகாராட்டிராவில் நாசிக் மண்டலத்தின் அகமத்நகரில் பிறந்தார். தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலேயே நடிக்கத் தொடங்கினார். புனே பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் முடித்த பின்னர், தனது நாடக ஆர்வத்தைத் தொடர்ந்தார். நாடகம் மற்றும் திரைப்படத்தில் பல மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார். கோவிந்த் நிஹலானியின் அர்த் சத்யா (1983) என்பது இவரது முதல் படமாக இருந்தது. இதற்காக அவர் பிலிம்பேர் விருதை வென்றார்.

தொழில்[தொகு]

இந்தி, மராத்தி, பெங்காலி, ஒரியா, ஹரியான்வி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1993 ஆண்டில், இவர் ஒரு எதிர்மறை பாத்திரத்தில் நடித்து பிலிம்பேர் விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றார். இதுபோன்ற விருது முதல் முறையாக நிறுவப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இவர் ஆன்கேன் என்ற படத்தில் காவல்துறை அதிகாரி பியாரே மோகன் என்ற வேடத்திலும் நடித்தார். இது இவருக்கு ஒரு நகைச்சுவை நாயகனாக பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

இவர் அறப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். சமூக ஆர்வலராகவும் பல சமூக அமைப்புகளில் ஈடுபட்டார்:

நோயும் மரணமும்[தொகு]

சதாஷிவ் அம்ராபுர்கர் அக்டோபர் 2014 இல் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2014 நவம்பர் 3 அன்று தனது 64 வயதில் இறந்தார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாஷிவ்_அம்ராபுர்கர்&oldid=3596577" இலிருந்து மீள்விக்கப்பட்டது