உள்ளடக்கத்துக்குச் செல்

சதானம் கிருஷ்ணன்குட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதானம் கிருஷ்ணன்குட்டி
சதானம் கிருஷ்ணன்குட்டி
சதானம் கிருஷ்ணன்குட்டி
பிறப்பு1941
செர்புலச்சேரி, பாலக்காடு, கேரளா, இந்தியா
தொழில்கதகளி நிகழ்த்துனர், பயிற்சியாளர்
தேசியம்இந்தியா

சதானம் கிருஷ்ணன்குட்டி (Sadanam Krishnankutty; பிறப்பு: செர்புலச்சேரி, 1941) தென்னிந்தியாவின் கேரளாவின் ஒரு பாரம்பரிய நடன-நாடக வடிவமான கதகளி கலைஞர் ஆவார். கேரள மாநில கதகளி விருது கலாமண்டலம் ஆய்வுநிதி[1] பெற்றவர். இவர் தனது நடிப்புகளில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 2002-இல் கேரள சங்கீத நாடக அகாதமி விருது [2] 2007-இல் சங்கீத நாடக அகாதமி விருது,[3] 2021-இல் கேரளாவின் திருர், துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ முனைவர் பட்டம் மற்றும் 2021-இல் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் ஆகியவற்றைப் பெற்றார்.

இளமை

[தொகு]

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள செர்புலச்சேரியில் 1941-ல் பிறந்தார். கிருஷ்ணன்குட்டி கீழ்பாதம் குமரன் நாயரின் சீடர் ஆவார். இவர் தேக்கிங்கட்டில் ராமுண்ணி நாயரிடம் தனது ஆரம்பப் பாடங்களைக் கற்றார். மேலும் மணி மாதவ சாக்கியரிடம் கண் உடற்பயிற்சி, இராச-அபிநயா வகுப்புகளையும் எடுத்துள்ளார்.[4]

கிருஷ்ணக்குட்டி ஓற்றப்பாலத்திற்கு கிழக்கே உள்ள சதானம் கதகளி அகாதமியில் (காந்தி சேவா சதன்) கதகளி பாடங்களைக் கற்றார். இவர் சிறிது காலம், கேரள கலாமண்டலம், இரிஞ்ஞாலக்குடாவில் உள்ள உன்னாய் வாரியர் சமாரக கலாநிலையம், பாட்னாவில் உள்ள கலா மந்திர் ஆகியவற்றில் கதகளி ஆசிரியராக இருந்தார். கேரளச் சங்கீத நாடக அகாதமி விருது (2002) மற்றும் மத்தியச் சங்கீத நாடக அகாதமி விருது (2006) ஆகியவற்றை வென்றவர்.[1] இவர் பாரம்பரியக் கதைகளிலும், புதிதாக அரங்கேற்றப்பட்ட கதகளி நாடகங்களிலும் பாத்திரங்களைச் சித்தரித்ததற்காக அறியப்படுகிறார். 

கிருஷ்ணன்குட்டி திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்சாலக்குடா நகரில் வசிக்கிறார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Sadanam Krishnankutty selected for the Kerala Kalamandalam Fellowship". The New Indian Express. Archived from the original on 14 August 2014. Retrieved 2014-08-08.
  2. "Kerala Sangeetha Nataka Akademi Award: Kathakali". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 26 February 2023.
  3. "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 31 March 2016. Retrieved February 5, 2016.
  4. "College of Letters, Arts and Social Sciences".
  5. "KATHAKALI – Gurus/Performers – www.artindia.net – Indian classical performing arts". www.artindia.net. Archived from the original on 18 July 2014. Retrieved 2014-08-04.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதானம்_கிருஷ்ணன்குட்டி&oldid=4383744" இலிருந்து மீள்விக்கப்பட்டது