சதாசிவ மல்லர்
| சதாசிவ மல்லர் | |
|---|---|
| காந்திபூரின் அரசன் | |
| ஆட்சிக்காலம் | 1574–1578 |
| முன்னையவர் | மகேந்திர மல்லர் |
| பதவி நீக்கம் செய்யப்பட்டார் | சிவசிம்ம மல்லர் |
| இறப்பு | 1581 பக்தபூர் |
| அரசமரபு | மல்லர் வம்சம் |
| தந்தை | மகேந்திர மல்லர் |
சதாசிவ மல்லர் (Sadashiva Malla) மல்லர் வம்சத்தின் மன்னராகவும், காந்திபூரின் ஐந்தாவது மன்னராகவும் இருந்தார். இவர் தனது தந்தை மகேந்திர மல்லருக்குப் பிறகு 1574 முதல் 1578 வரை ஆட்சி செய்தார்.[1]
மகேந்திர மல்லரின் மரணத்திற்குப் பிறகு சதாசிவ மல்லர் காந்திபூரின் மன்னராக பதவியேற்றார். இவர் தீவிரமான ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டார். மேலும் இவரது குறுகிய கால ஆட்சியின் போது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இவர் ஒரு முறை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2][3]
இறுதியில் இவரது சகோதரரும் பொது மக்களும் இவரை காந்திபூரிலிருந்து விரட்டினர். இவர் பக்தபூரில் தஞ்சம் புகுந்தார். கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட இவர் 1581 இல் இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, இவரது சகோதரர் சிவசிம்ம மல்லன் இராச்சியத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு காந்திபூர் பிரதேசத்தை விரிவுபடுத்தினார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF) (in English). Kathmandu, Nepal: University of Cambridge. p. 62.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 Shrestha, D.B.; Singh, C.B. (1972). The History of Ancient and Medieval Nepal (PDF) (in English) (1st ed.). Kathmandu: University of Cambridge. pp. 33–34.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Wright, Daniel (1877). History of Nepal (PDF). University of Cambridge. pp. 208–209.