உள்ளடக்கத்துக்குச் செல்

சதய விழா (இராஜராஜ சோழன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் இராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா அல்லது சதய விழா ஆண்டுதோறும் முதலாம் இராஜராஜ சோழனின் பிறந்தநாளான ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரம் அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 2022ஆம் ஆண்டு மாமன்னர் முதலாம் இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா ஆகும். 2022ஆம் ஆண்டு முதல் சதய விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.[1]இரண்டு நாள் நடைபெறும் சதய விழாவின் போது இராஜராஜ சோழன் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்துவதுடன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் கருத்தரங்கங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதய_விழா_(இராஜராஜ_சோழன்)&oldid=3703909" இலிருந்து மீள்விக்கப்பட்டது