சதக்கத்துல்லா அப்பா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
குறிக்கோளுரை“இறைவா, எனக்கு அருளும் ஞானமும் தருவாயக”
உருவாக்கம்1971
தலைவர்அல்ஹாஜ் . பி. எஸ். ஏ. பல்லாக் லெபி
முதல்வர்மருத்துவர். எம். முகமது சாத்திக்
அமைவிடம்ரகமது நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் - 627 011, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://sadakath.ac.in

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (Sadakathullah Appa College)[1] என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஓர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2][3]

வரலாறு[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் கணிசமான இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் உயர்படிப்பிற்காக, இஸ்லாம் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் காரணமாக, புகழ்பெற்ற அரபு அறிஞரான சதக்கத்துல்லாஹ் அப்பா என்பவர் பெயரில் இக்கல்லூரியானது, 1971 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[சான்று தேவை] இக்கல்லூரியின் குறிக்கோள் "இறைவா, எனக்கு அருளும் ஞானமும் தருவாயக" என்பதாகும்.[சான்று தேவை] இக்கல்லூரியானது 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு சதாக்கத்துல்லாஹ் அப்பா கல்விச் சங்கத்தால் இயங்குகிறது. முதலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் 20 ஆண்டுகளாக இணைக்கப்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உருவாகியபோது இப்பல்கலைக்கழக வரம்பின்கீழ் இணைக்கப்பட்டது.

துறைகள்[தொகு]

அறிவியல்

 • இயற்பியல்
 • வேதியியல்
 • கணிதம்
 • தாவரவியல்
 • விலங்கியல்
 • கணினி அறிவியல்
 • நுண்ணுயிரியல்
 • உடற்கல்வி
 • வாழ்க்கை அறிவியல்

கலை மற்றும் வணிகம்

 • தமிழ்
 • அரபி
 • ஆங்கிலம்
 • வரலாறு
 • பொருளியல்
 • வணிகவியல்
 • வணிக நிர்வாகவியல்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sadakathullah Appa College, Palayamkottai, Tirunelveli, Tamilnadu, India". sadakath.ac.in. 2018-09-02 அன்று பார்க்கப்பட்டது.
 2. "sadakathullah appa college about".[தொடர்பிழந்த இணைப்பு]
 3. http://www.punjabcolleges.com/15078-indiacolleges-Sadakathullah-Appa-College-Thirunelveli-(Tirunelveli)/