சண்முக நாடார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சண்முக நாடார் (1903-1969) தமிழகத்தின் சிவகாசி நகரைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர். இவரும் இவரது உறவினரான அய்ய நாடாரும் சிவகாசி நகரை தொழில்மயப் படுத்தியதற்காக அறியப்படுகின்றனர். இவர் காளீசுவரி பட்டாசு நிறுவனத்தைத் தொடங்கியவர். மேலும் இவர் சிவகாசி நகராட்சியின் தலைவராக 1952- இல் இருந்து 1955 வரை இருந்துள்ளார். 1922-இல் இவரும் அய்ய நாடாரும் கல்கத்தா சென்று அங்கு தீப்பெட்டி செய்யும் தொழிலைக் கற்று வந்து சிவகாசியில் தொழிற்சாலைகளைத் தொடங்கினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்முக_நாடார்&oldid=2693473" இலிருந்து மீள்விக்கப்பட்டது