சண்முகம் சிவலிங்கம்
சண்முகம் சிவலிங்கம் (ஸ்டீவன் மாஸ்டர்) | |
---|---|
பிறப்பு | சண்முகம் சிவலிங்கம் டிசம்பர் 19, 1936 பாண்டிருப்பு ,அம்பாறை |
இறப்பு | ஏப்ரல் 20, 2012 பாண்டிருப்பு |
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | விஞ்ஞான ஆசிரியர்,ஈழத்து எழுத்தாளர் |
வலைத்தளம் | |
சண்முகம் சிவலிங்கம் |
சண்முகம் சிவலிங்கம் (டிசம்பர் 19, 1936 – ஏப்ரல் 20, 2012, பாண்டிருப்பு) ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். 1960 முதல் இலக்கியத்துக்குப் பங்காற்றி வந்த சண்முகம் சிவலிங்கம் ஓர் ஓய்வுபெற்ற விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் பிறந்தது ஒரு இந்துக் குடும்பத்தில். ஆனால் பாடசாலை காலத்திலேயே கத்தோலிக்கராக மதம் மாறியவர். ஒரு கத்தோலிக்கக் குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டவர். கேரளத்தில் படித்து அறிவியலில் பட்டம் பெற்றார். அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணி ஆற்றினார். பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது கிராமத்தில் இவர் ஸ்டீவன் மாஸ்டர் எனவே அழைக்கப்பட்டார். இவருக்கு ஆறு ஆண் பிள்ளைகள். ஒருவர் ஈழப்போராட்டத்தில் களத்தில் உயிரிழந்தவர்.
இவரது கவிதைகளின் தொகுதி ஒன்று 1988இல் நீர்வளையங்கள் என்ற பெயரில் வெளியானது. இவர் விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதுவதோடு கவிதை மொழிபெயர்ப்பிலும் பங்காற்றியுள்ளார். ஒரு கவிஞராகவே பரவலாக அறியப்பட்டாலும் இவரது சிறுகதைகளும் மிகவும் தரமானவையே. சண்முகம் சிவலிங்கம் எழுதிய ஆக்காண்டி கவிதை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நூல்கள்
[தொகு]- நீர் வளையங்கள்-கவிதைத் தொகுதி
- சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும், காலச்சுவடு வெளியீடு, 2011.
- "காண்டாவனம்" சிற்கதைத் தொகுதி
வெளி இணைப்புகள்
[தொகு]- சண்முகம் சிவலிங்கம் வலைப்பதிவு பரணிடப்பட்டது 2013-05-06 at the வந்தவழி இயந்திரம்
- சண்முகம் சிவலிங்கம் காலமானார், இனியொரு, ஏப்ரல் 20, 2012
- சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - அறிமுகம்[தொடர்பிழந்த இணைப்பு]
- கவிஞர் சண்முகம் சிவலிங்கம் – கிளர்த்தும் நினைவுகள்
- கவிஞர் சண்முகம் சிவலிங்கம் - அஞ்சலிக் குறிப்புகள்