உள்ளடக்கத்துக்குச் செல்

சண்முகநாதபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூர் வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும்.

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவில்

[தொகு]

இந்த ஊரின் சிறப்பு இங்கு உள்ள "அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவில் ".இங்கு உள்ள சுற்றூ வட்டார கிராமங்களில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் இங்கு பெரும்பாலும் நடத்தப்படுகின்றன.இதன் ஒரு தனி சிறப்பு இங்கு திருமணமான தம்பதியினருக்கு குழந்தை இல்லாமல் இருப்பதில்லை.ஊருக்கு வரும் நுழைவாயில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.இதனை சுற்றீ இரண்டு குளங்கள் அமைந்துள்ளது.

இங்கு உள்ள சுற்றூ வட்டார கிராமங்களில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் இங்கு பெரும்பாலும் நடத்தப்படுகின்றன.இதன் ஒரு தனி சிறப்பு இங்கு திருமணமான தம்பதியினருக்கு குழந்தை இல்லாமல் இருப்பதில்லை.ஊருக்கு வரும் நுழைவாயில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.இதனை சுற்றீ இரண்டு குளங்கள் அமைந்துள்ளது.

இந்த ஊரின் தெற்குப்பகுதில் "அருள்மிகு சின்னபுலி அய்யணார் திருக்கோவில் " உள்ளது.மேற்கு பகுதியில்"அருள்மிகு செல்லியம்மன் திருக்கோவில்" உள்ளது.தென்மேற்கில் "அருள்மிகு யாணைக்குட்டி திருக்கோவில்"உள்ளது.

அருள்மிகு சின்னபுலி அய்யணார் திருக்கோவில்

[தொகு]

இத்திருக்கோவில் அ.வல்லாளபட்டி பேரூராட்சியை சேர்ந்தது. அரிட்டாபட்டி செல்லும் வழியில் உள்ளது. இத்திருக்கோவிலின் திருவிழாவை "கூத்துதிருவிழா" என்றழைப்பார்கள்.இது 8 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெரும் இத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு நேர்த்திகடனை செலுத்துவதற்கு குதிரை செய்து காணிக்கை செலுத்துவர்.இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் "இந்தியாவிலேயே அதிக குதிரை(புரவி எடுப்பு) காணிக்கை செலுத்தும் ஒரே திருக்கோவில்" என்ற பெருமை உண்டு.இக்கோவிலை சேர்ந்த "பெரியபுலி அய்யணார் திருக்கோவில்" ஒன்று உள்ளது. இத்திருக்ககோவில் அ.வல்லாளபட்டியிலிருந்து புலிப்பட்டி செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது.இங்கிருந்து தொடங்கி சின்னபுலி அய்யணார் திருக்கோவில் வரை புரவி எடுப்பு நடைபெறும்.7 நாட்கள் இங்கு இத்திருவிழா நடைபெரும்.

அருள்மிகு செல்லியம்மன் திருக்கோவில்

[தொகு]

இத்திருக்கோவில் ஏ. வெள்ளாளப்பட்டி பேரூராட்சியை சேர்ந்தது. சண்முகநாதபுரத்திலிருந்து அ.வல்லாளபட்டி செல்லும் வழியில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆனி மாதமும் திருவிழா நடைபெறும்.

அருள்மிகு யாணைக்குட்டி திருக்கோவில்

[தொகு]

இத்திருக்கோவில் சண்முகநாதபுரத்தை சேர்ந்தது.சண்முகநாதபுரத்திலிருந்து அ.வல்லாளபட்டி செல்லும் சாலையில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆடி மாதமும் திருவிழா நடைபெறும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்முகநாதபுரம்&oldid=2754911" இலிருந்து மீள்விக்கப்பட்டது