சண்முகசுந்தரம் மோகன்
மாண்புமிகு நீதியரசர் சண்முகசுந்தரம் மோகன் Shanmughasundaram Mohan | |
---|---|
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 1991 அக்டோபர் 07 – 1995 பிப்ரவரி 11 | |
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி | |
பதவியில் 1989 அக்டோபர் 19 – 1989 அக்டோபர் 26 | |
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி | |
பதவியில் 1988 டிசம்பர் 13 – 1989 அக்டோபர் 18 | |
கருநாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி | |
பதவியில் 1989 அக்டோபர் 26 – 1991 அக்டோபர் 06 | |
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி | |
பதவியில் 1975 ஆகத்து 01 – 1988 டிசம்பர் 12 | |
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி | |
பதவியில் 1974 பிப்ரவரி – 1975 சூலை 31 | |
கருநாடக ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 1990 பிப்ரவரி 5 – 1990 மே 8 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 11 பெப்ரவரி 1930
இறப்பு | 27 திசம்பர் 2019 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 89)
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியா |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம் |
சண்முகசுந்தரம் மோகன் (Shanmughasundaram Mohan) என்பவர் முன்னாள் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் கருநாடக மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் 11 நூல்களும், தமிழில் ஏழு நூல்களும் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சண்முகசுந்தரம் மோகன் 1930ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளநிலைப் பட்டமும், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.[1] 1954 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்த இவர், 1969ஆம் ஆண்டு ஓர் அரசாங்க வழக்கறிஞரானார் [1] 1956ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை, சென்னை சட்டக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக மோகன் பணியாற்றினார்.[2]
சண்முகசுந்தரம் 1971ஆம் ஆண்டு சென்னையின் தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.[1] பிப்ரவரி 1974ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 1975ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியில் நிரந்தர நீதிபதியாக நியமனமானார்.[1] 1989ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதியில் கருநாடக மாநில உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இவர் உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றாநர். 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.[1]
1990ஆம் ஆண்டு பெந்தேகண்டி வெங்கடசுப்பையா பதவி நீக்கப்பட்டதை அடுத்து, இவர் 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 5 முதல் 1990ஆம் ஆண்டு மே 8 வரை கருநாடக மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்தார்.[1]
ஓய்வுக்குப் பிறகு நீதிபதி மோகன் தேசிய இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளின் தலைவராகவும், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஊதியத் திருத்தக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.[3][4] 2004ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுபாடு வாரியத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக பார்வையாளராக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.[3]
2019 திசம்பர் 27 அன்று சண்முகசுந்தரம் மோகன் தமிழ்நாட்டில் சென்னையில் இறந்தார்.[5]
இலக்கியப் பங்களிப்புகள்
[தொகு]மோகன் பல்வேறு பாடப்பொருள்களில் ஆங்கிலத்தில் 11 புத்தகங்களையும், கவிதைத் தொகுப்புகள் உட்பட தமிழில் ஏழு புத்தகங்களையும் எழுதியுள்ளார். [3] உலக கலை மற்றும் கலாச்சார அகாடமியின் தலைவராக பணியாற்றினார். 2004-2010 காலகட்டத்தில் ஆறு ஆண்டுகள் உலகக் கவிஞர்கள் மாநாட்டின் தலைவராக இருந்தார்.[4]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]- சிறீ முத்துசுவாமி ஐயர் உதவித்தொகை.[1]
- லட்சுமிநரசா ரெட்டி தங்கப் பதக்கம் [2]
- டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் விருது
- 1952 ஆம் ஆண்டில் சட்டப் படிப்பில் முதல் வகுப்பைப் பெற்றதற்காக சென்னை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் [4]
- மூன்று வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் உட்பட நான்கு பல்கலைக் கழகங்கள் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "S. MOHAN". karnatakajudiciary.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
- ↑ 2.0 2.1 Saxena, Akshita (2019-12-27). "Former Supreme Court Judge, Justice S. Mohan Passes Away". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
- ↑ 3.0 3.1 3.2 "Former Karnataka Chief Justice S Mohan dies at 90". டெக்கன் ஹெரால்டு (in ஆங்கிலம்). 2019-12-27. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Late Hon'ble Mr. Justice S. Mohan" (PDF). Supreme Court of India.
- ↑ "Former top court judge S Mohan dead | Chennai News". The Times of India. 2019-12-28. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.