உள்ளடக்கத்துக்குச் செல்

சண்டி கோயில்

ஆள்கூறுகள்: 30°44′07″N 76°47′28″E / 30.73528°N 76.79111°E / 30.73528; 76.79111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டி தேவி கோயில்
Chandi Devi Temple
சண்டிமந்திர் இராணுவமுகாம் இரயில் நிலையத்திற்குள் அமைந்துள்ள சண்டி கோயிலின் முன் வாயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:அரியானா
மாவட்டம்:பஞ்சகுலா மாவட்டம்
அமைவு:சண்டி மந்திர் இராணுவ முகாம் இரயில் நிலையம் தேசிய நெடுஞ்சாலை-5 இல்
ஆள்கூறுகள்:30°44′07″N 76°47′28″E / 30.73528°N 76.79111°E / 30.73528; 76.79111
கோயில் தகவல்கள்
இணையதளம்:அதிகாரப்பூர்வ இணையதளம்

சண்டி கோயில் (Chandi Mandir) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பஞ்ச்குலா நகரில் அமைந்துள்ளது. இது சண்டிகர்-கால்கா நெடுஞ்சாலையில் சக்தி தெய்வமான சண்டிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்து கோயில் ஆகும். கோயிலின் பெயரால் பெயரிடப்பட்ட சண்டிகர் நகரத்திலிருந்து சுமார் 15 கி. மீ தொலைவிலும், மன்சா தேவி ஆலயத்திலிருந்து சுமார் 10 கி. மீ. தொலைவிலும் சண்டி கோயில் உள்ளது. அழகான சுற்றுப்புறங்கள் மற்றும் சிவாலிக் மலைகளின் பின்னணியில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]

அமைவிடம்

[தொகு]

இந்திய இராணுவத்தின் மேற்குப் பிரிவின் தாயகமான சண்டி கோயில் இராணுவ முகாம் இரயில் நிலையத்தில் சண்டி கோயில் அமைந்துள்ளது.

கோயில்

[தொகு]

சண்டி கோயில் சிறீ மாதா மானசா தேவி ஆலய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கோவிலில் சண்டி, இராதா கிருட்டிணர், அனுமான், சிவன் மற்றும் இராமர் உள்ளிட்ட பல்வேறு இந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளன.

திருவிழாக்கள்

[தொகு]

நவராத்திரியின் போது நிகழும் துர்கா பூசை பண்டிகையின் போது, ​​ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

பிற சண்டி கோயில்கள்

[தொகு]

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் சண்டி தேவி கோயில்கள் உள்ளன. அவை:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டி_கோயில்&oldid=4262085" இலிருந்து மீள்விக்கப்பட்டது