சண்டிமுனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டிமுனி
இயக்கம்மில்கா எஸ்.செல்வகுமார்
தயாரிப்புசிவராம்குமார்
இசைஏ.கே.ரிஷால்சாய்
நடிப்பு
ஒளிப்பதிவுசென்தில் ராஜகோபால்
படத்தொகுப்புபுவன் சீனிவாசன்
கலையகம்சிவம் மீடியா ஒர்க்ஸ்
வெளியீடுபெப்ரவரி 7, 2020 (2020-02-07)
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சண்டிமுனி (Sandimuni) என்பது மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திகில் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் நட்டி , மனிஷா யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2]

கதைச் சுருக்கம்[தொகு]

மனைவி தாமரை ( மனிஷா யாதவ் ) இறந்த பிறகு, கணவர் சண்டிமுனி ( நட்டி ) மற்றொரு பெண்ணான இராதிகாவை (இதுவும் மனிஷா யாதவ்) காதலிக்கிறார். அவர் வேறொரு பெண்ணைக் காதலிப்பதைப் பார்த்ததும், இறந்த மனைவியின் ஆவி இதைத் தாங்க முடியாமல் அவரைத் தாக்கத் தொடங்குகிறது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக இருந்த செல்வகுமார் இயக்குனராக அறிமுகமான படம் இது.[6] படத்தின் பெரும்பகுதி பழனிக்கு அருகில் உள்ள மெய்க்கரசபட்டியில் உள்ள ஒரு வீட்டில் நடக்கிறது. இரண்டாவது முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.[5][7]

வெளியீடு[தொகு]

"சண்டிமுனி" 7 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரத்தை வழங்கியது. மேலும், "கதை, கதாபாத்திரம் , திரைக்கதையில் எந்த புதுமையான கூறுகளும் இல்லாமல், திரைப்படம் ஒரு பெரிய குழப்பம்" என்று எழுதியது. மாலை மலர் பாடல்கள், ஒளிப்பதிவு, நகைச்சுவைக் காட்சிகள் பின்னணி இசை ஆகியவற்றை பாராட்டியது.[8]

ஒலிப்பதிவு[தொகு]

இப்படத்திற்கான பாடல்களுக்கு ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்துள்ளார்.[9][10]

சான்றுகள்[தொகு]

  1. "Manisha Yadhav bags a horror film". 28 September 2018.
  2. "Natty-Manisha Yadav's film named Sandi Muni".
  3. "'Sandi Muni': Yogi Babu's to star opposite Manisha Yadav in the upcoming horror-comedy – Times of India". The Times of India.
  4. "A horror film for the entire family". New Indian Express.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "'Sandi Muni': Yogi Babu's to star opposite Manisha Yadav in the upcoming horror-comedy – Times of India". The Times of India."'Sandi Muni': Yogi Babu's to star opposite Manisha Yadav in the upcoming horror-comedy – Times of India". The Times of India.
  6. "A horror film for the entire family". New Indian Express."A horror film for the entire family". New Indian Express.
  7. "'Sandi Muni': Yogi Babu's to star opposite Manisha Yadav in the upcoming horror-comedy - Times of India".
  8. "பேயிடம் இருந்து காதலியை காப்பாற்ற போராடும் நாயகன் - சண்டிமுனி விமர்சனம்". 11 February 2020.
  9. "Sandimuni Songs: Sandimuni MP3 Tamil Songs by AK. Rishalsai Online Free on Gaana.com" – via gaana.com.
  10. "Sandimuni". Archived from the original on 2021-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-10-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிமுனி&oldid=3709504" இலிருந்து மீள்விக்கப்பட்டது