சண்டிகரில் இராமலீலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமலீலை (Ramlila in Chandigarh) என்ற நாடகம் சண்டிகரில் கொண்டாடப்படும் பல்வேறு வகையான பண்பாட்டு நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதொரு நாட்டுப்புறக் கலையாகக் கருதப்படுகிறது. [1] இந்து கடவுளான இராமர் தொடர்பான ஆயிரக்கணக்கான நடன நாடகங்கள் மற்றும் நடன நிகழ்வுகளைக் கொண்டதே இராமலீலையாகும். சண்டிகரில் மட்டும் இராமலீலையைக் கொண்டாட கிட்டத்தட்ட 60 குழுக்கள் உள்ளன, அவற்றில் 40 குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. [2] சண்டிகர் கேந்திரியா இராமலீலை மகாசபா என்ற குழு இவற்றை ஒருங்கிணைக்கிறது. நகரத்தை அடிப்படையாகக் கொண்ட 60 இராமலீலை நிகழ்வுகளையும் ஒன்றாக இணைத்து மூன்று நாட்களுக்கு இக்குழு அவர்களுக்கிடையில் போட்டியை நடத்துகிறது. இந்தி நாட்காட்டியின்படி இராமலீலை ஐப்பசி மாதத்தின் அமாவாசை முதல் தசமி திதி வரை ஆண்டுதோறும் நடைபெறுகிறது. சண்டிகரின் பிரிவு 7 இல் இருக்கும் நவயுக இராமலீலை மற்றும் தசரா குழு, பிரிவு 28 இல் இருக்கும் கார்வால் இராமலீலை மண்டல், பிரிவு 228 இல் இருக்கும் சண்டிகர் இராமலீலை குழு உள்ளிட்டவை இராமலீலை நாடகத்தை நிகழ்த்தும் சில முக்கியமான குழுக்களாகும். பதிவு செய்யப்பட்டுள்ள 40 குழுக்களில் இவை மூன்றும் மிகப்பழமையான குழுக்களாகும். இவர்களின் இராமலீலை நிகழ்வுக்கு 10000 பார்வையாளர்கள் வரை கூடுவதுண்டு. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dussehra: Ramlila staged in Lucknow, Chandigarh". India Today. India Today. 25 October 2012. http://indiatoday.intoday.in/gallery/dussehra-ramlila-celebrated-in-lucknow-chandigarh/1/8040.html. பார்த்த நாள்: 19 September 2017. 
  2. "60 venues to stage Ramlila in Chandigarh this year". The Hindustan Times. HT Media (HT Correspondents). 1 October 2016. http://www.hindustantimes.com/punjab/60-venues-to-stage-ramlila-in-chandigarh-this-year/story-6lnNgj7qpZu5MvCLHBGCxJ.html. பார்த்த நாள்: 19 September 2017. 
  3. "Chandigarh gets ready for Ramleela". The Times of India. Times Internet (Kamini Mehta). 23 September 2014. http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Chandigarh-gets-ready-for-Ramleela/articleshow/43234300.cms. பார்த்த நாள்: 19 September 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிகரில்_இராமலீலை&oldid=3093914" இருந்து மீள்விக்கப்பட்டது