சண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சண்டர் என்பது இந்து சமயத்தில் சில கடவுள்களின் நிர்மால்ய அதிகாரத்தினைப் பெற்ற பதவியாகும். இப்பதவியைப் பெற்றவர்கள் அந்தந்த கடவுள்களின் மீது அதீத அன்பினைக் கொண்டவர்களாகவும், அக் கடவுள்களின் தரிசனப் பலனை பக்தர்களுக்கு அருள்பவர்களாகவும் உள்ளார்கள்.

தனிப்பெரும் சமயமாக தொன்மத்தில் இருந்த சைவம், சாக்தம், காணதிபத்தியம், கௌமாரம், சௌரம் ஆகியவற்றின் முதற் தெய்வங்களுக்கு சண்டர்கள் உண்டு.


  1. சைவம் - சிவன் – த்வனி சண்டர்
  2. சௌரம் - சூரியன் – தேஜஸ்சண்டர்
  3. காணதிபத்தியம் - விநாயகர் – கும்பச் சண்டர்
  4. கௌமாரம் - சுப்ரமண்யர் – சுமித்ரசண்டர்

இந்த சமயங்களில் சைவம் தவிர்த்து மற்றவை அனைத்தும் சைவத்தினுள் ஒடுங்கிவிட்டமையால் சைவத் திருக்கோயில்களில் மட்டுமே சண்டர் காண முடிகிறது. சைவத் திருக்கோயில்களில் உள்ள சண்டர் சண்டீசர் என்று அழைக்கப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டர்&oldid=2157423" இலிருந்து மீள்விக்கப்பட்டது