சட்டேசுவரி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சட்டேசுவரி கோயில்
நுழைவு வாயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்20 சட்டேசுவரி சாலை, சிட்டகொங்
புவியியல் ஆள்கூறுகள்22°21′10″N 91°49′34″E / 22.35275°N 91.82605°E / 22.35275; 91.82605
சமயம்இந்து சமயம்
மண்டலம்சிட்டகொங்
மாவட்டம்சிட்கொங்

சிறீ சிறீ சட்டேசுவரி காளி கோயில் (Sree Sree Chatteshwari Kali Temple) என்பது வங்காளதேசத்திலுள்ள சிட்டகொங் நகரின் மையத்தில் காளி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும். இங்குள்ள தெய்வம் சிட்டகொங் நகரத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படுகிறது. வங்காளதேச விடுதலைப் போரின்போது பாக்கித்தான் இராணுவத்தினரால் இக்கோவில் சேதப்படுத்தப்பட்டது.பின்னர், சக்ரவர்த்தி குடும்பத்தினரால் மீண்டும் கோயில் கட்டப்பட்டது. முந்தைய சிலை வேப்ப மரத்தால் செய்யப்பட்டிருந்தது. இது போரின் போது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது. சிலையின் மேல் பகுதி மட்டும் போர் முடிந்த பிறகு சக்ரவர்த்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் மீட்கப்பட்டது. சேதமடைந்த வேம்பு மரத்தாலான சிலை இன்றும் கோயிலில் உள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர், குடும்பத்தாரால் ஆலயம் புனரமைக்கப்பட்டு, புதிய சிலை ஒன்று நிறுவப்பட்டது. இது வாரணாசியில் தயாரிக்கப்பட்டு, தாராபத சக்கரவர்த்தி என்றும் தாராபத அதிகாரி என்றும் அழைக்கப்படும் சக்ரவர்த்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் விமானம் மூலம் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. [1] மேற்கு வங்காள முன்னாள் அமைச்சர் தருண் காந்தி கோசு மற்றும் அவரது குடும்பத்தினரால் இந்த சிலை நன்கொடையாக வழங்கப்பட்டது.

சக்தி பீடம்[தொகு]

சதிதேவியின் சடலத்தை சுமந்து செல்லும் சிவன்

சாக்த சமயத்தவரால் வழிபடும் சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோயில் கருதப்படுகிறது. சக்தி பீடங்களின் தோற்றம் தட்சனின் வெள்வி, சதி தேவியின் தீக்குளிப்பு, சிவன் அவளது சடலத்தை சுமந்து அலைந்து திரிந்தபோது உடல் உறுப்புகள் வீழ்ச்சியடைந்த புராணங்களில் இருந்து வருகிறது. சதி தேவியின் உடல் உறுப்புகள் விழுந்த அந்த ஆலயங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டன. [2]

சான்றுகள்[தொகு]

  1. "Other notable Work of Dr. Mahanambrata". Mahanam Sampraday. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 17 August 2012.
  2. "Kottiyoor Devaswam Temple Administration Portal". Kottiyoor Devaswam. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டேசுவரி_கோயில்&oldid=3699396" இலிருந்து மீள்விக்கப்பட்டது