சட்டிச்சாமியார் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டிச்சாமியார் கோவில் தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் கோபாலபட்டணம் கிராமத்தில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

சட்டிச்சாமியாரின் இயற்பெயர் நாராயண சுவாமி என்றும் அவர் பாஞ்சாலங்குறிச்சியைச் சார்ந்த மங்கம்மாள்புரம், சூரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவர் தம் மனைவி மக்களை விட்டுத் துறவியாக கோபாலபட்டணம் கிராமத்திற்கு மேற்கிலுள்ள காவனூர் கிராமத்தில் வாழ்ந்த தேவர் குலத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவரிடம் வாழ்ந்து வந்தார். அப்பெரியவரின் இறப்பிற்குப் பின் சட்டிச்சாமியார் கோபாலபட்டணத்தில் வசிக்கலானார்.

வாழ்க்கைமுறை[தொகு]

சட்டிச்சாமியார் தனக்கென எதுவும் சேமிக்காமல் அன்றைய உணவுக்காக திருவோடு மட்டும் கொண்டிருந்தார். போகும் வழியில் யார் களத்தில் நெல் அடிக்கிறார்களோ அவரிடம் நெல் வாங்கிக்கொள்வார். அவற்றைப் பறவைகளுக்கு வாரி இறைத்துவிட்டு மிஞ்சியதை பயிறு வகையாக மாற்றிக்கொண்டு தானும் உண்டு சிறு பிள்ளைகளிடம் பகிர்ந்து கொடுத்து விடுவார். அவருக்கு பசி எடுத்தால் மட்டும் திருவோட்டை ஏந்துவார், இல்லையெனில் எத்தனை நாட்களானாலும் யாரிடமும் எதுவும் கேட்க மாட்டார். அவர் ஒரு நாள் கூட குளித்ததே இல்லையாம், இருப்பினும் அவர் கடந்து செல்லும் போது அவர் உடல் முழுவதும் பன்னீர் வாடை வீசும் என்பார்கள். ஊரில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லையென்றால இவரிடம் சொன்னால் உடனே குணமடைவார்கள் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை.

ஜீவ சமாதி[தொகு]

சித்தர்கள் தங்களது மரணத்தை தனது சீடர்களிடம் முன் கூட்டி தெரிவித்து குறித்த நாளில், குறித்த நேரத்தில், உடலிலிருந்து உயிரை பிரித்துக்கொள்வர். இது தனது வாழ்நாளின் நீண்ட நெடுநாள் பயிற்சியின் மூலம் நடைமுறைச் சாத்தியம் (ஸ்ரீ மத் ராகவேந்திரா) என்பதற்கு தமிழகத்தில் நிறைய ஞானிகளின் ஜீவ சமாதிகள் உண்டு. அது போலவே சட்டிசாமிகள் தனது மரணத்தையும் முன்கூட்டியே அறிந்து ஊர் மக்களுக்கு முதல் நாளே சொல்லிவிட்டு தனது சடலத்தை காவனூரிலேயே அடக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர் அறிந்து கூறியது போலவே அக்டோபர் இரண்டாம் தேதி (எந்த ஆண்டு?) உயிர் துறந்தார். அவர் இறப்பிற்குப் பின்பும் அவரது உடலில் உரோமங்கள் வளர்ந்ததாக ஊரார் கூறுகின்றனர்.

கோவில் பணி[தொகு]

சட்டிச்சாமியாரின் வாழ்க்கை முறையைக் கண்ட கோபாலபட்டணத்தைச் சேர்ந்த சு.வீ. ஆறுமுகம் என்பவர் 1964-ல் கோவில் கட்டும் பணியைத் தொடங்கினார். திருவாடானையைச் சேர்ந்த ரெத்தினம் ஸ்தபதிகள் சட்டிச்சாமியாரின் திருஉருவச்சிலையை வடிவமைத்தவர். தற்போது கோவில் பணிகளை சு.வீ. ஆறுமுகனாரின் மகன் ஆ. ஆறுமுகம் செய்து வருகிறார். தற்போது கோவில் இடிக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டிச்சாமியார்_கோவில்&oldid=1520731" இலிருந்து மீள்விக்கப்பட்டது