உள்ளடக்கத்துக்குச் செல்

சட்டம் மற்றும் வழக்குகளில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டம் மற்றும் வழக்குகளில் பெண்கள் (Women in Law and Litigation) என்பது சட்டத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாட்டைக் கையாள்வதற்காக பெண் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். பாலின பாகுபாட்டிற்கு எதிராக வழக்காடுவதற்கு பெண் வழக்கறிஞர்களை விட ஆண் வழக்கறிஞர்கள் வழக்காடுவதை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.[1]

வரலாறு.

[தொகு]

இந்த சங்கம் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி இரஞ்சனா தேசாய் ஆகியோரின் மேற்பார்வையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.[2]

நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

[தொகு]

தொழில்முறை ஆதரவு, வாதிடும் திறன்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களின் வளர்ச்சிக்கான வழிகள் குறித்த விவாதத்திற்கான ஒரு தளத்தை வழங்குவதற்காக சட்டம் மற்றும் வழக்குகளில் பெண்கள் சங்கம் உருவாக்கப்பட்டது. தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி இமா கோலி , "உயர் பதவிகளை அடைந்த மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட பயிற்சியாளர்கள் தங்கள் அனுபவங்களை இந்த அமைப்புக்கு திருப்பித் தருவதற்கான ஒரு வழியாகும்" என்று இச்சங்கத்தை வரையறுத்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]