உள்ளடக்கத்துக்குச் செல்

சட்டத் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சட்டத் தோட்டம்
சேத் மோதிலால் கிராபாய் பூங்கா
Map
வகைநகர்ப்புற பூங்கா
அமைவிடம்அகமதாபாத், இந்தியா
பரப்பளவு10.16 ஏக்கர்கள் (41,100 m2)
வடிவமைப்பாளர்கமல் மங்கள்தாசு
உரிமையாளர்அகமதாபாத் மாநகராட்சி
இயக்குபவர்அசீமா குழு
திறந்துள்ள நேரம்அனைத்து நேரங்களிலும்
நீர்குளம்
பொதுப் போக்குவரத்துஅகமதாபாத் மாநகராட்சி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது
வ்ழிதடம் 8

சட்டத் தோட்டம் (Law Garden) இது சேத் மோதிலால் கிராபாய் பூங்கா என அழைக்கப்படுகின்றது. [1] இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்காவாகும் . இது 1997 ஆம் ஆண்டில் மறுவடிவமைக்கப்பட்டது. பூங்காவின் சுவர்களை ஒட்டி கைவினைப் பொருட்கள், தெரு உணவு மற்றும் பிற பொருட்களை விற்கும் ஒரு தெருச் சந்தை அமைந்துள்ளது. இந்த தெருச் சந்தை 2020 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.

இடம்

[தொகு]

எல்லிசுபிரிட்ஜ் நகரத்தில் எண் 3 இல், மனை எண் 430 இல் இந்த சட்டத் தோட்டம் அமைந்துள்ளது. [1] இந்த இடம் நகரின் மேற்கு மண்டலத்தின் நவரங்புரா வார்டில் குசராத் சட்ட சங்கத்திற்கு எதிரே இருந்த ஒரு பரந்த முக்கோண திறந்தவெளி இடமாகும். இது பின்னர் ஒரு பொது பூங்காவாக உருவாக்கப்பட்டது. [1][2][3]

இந்தத் தோட்டம் அருகிலுள்ள சட்டக் கல்லூரியின் பெயரால் அழைக்கப்படுகிறது. [3] இது எல்லாப் பக்கங்களிலும் சாலைகளால் சூழப்பட்டுள்ளது. வடக்குப் பக்கத்தில், நகராட்சி ஆணையர் மற்றும் மேயரின் இருப்பிடங்கள் அமைந்துள்ளன. மேலும் சட்டக் கல்லூரி மற்றும் சி.ஜி. சாலை மேற்கில் உள்ளன. ஆங்கில நூலகம், எல்லிசுபிரிட்ஜ் சிம்கானா, இந்தியப் பொறியாளர்கள் நிறுவனம் மற்றும் ரவிசங்கர் ராவல் கலா பவன் என்ற மாநில கலைக்கூடம் ஆகியவை தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளன. [1]

வரலாறு

[தொகு]

1995 ஆம் ஆண்டில், அகமதாபாத் மாநகராட்சி ஆணையர், பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் பூங்காவை மறுவடிவமைக்க முன்மொழிந்தார். இந்த மறுவடிவமைப்புக்கு ஆசிமா குழுமத்தின் கட்டுமான நிறுவனமான 'சௌம்யா கட்டுமானப் பணிகள்' நிதியளித்து, இதன் பணிகளை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் அக்டோபர் 1995 ஆம் ஆண்டில் கையெழுத்தானது. கமல் மங்கல்தாசு என்பவர்இந்த திட்டத்தின் கட்டிடக் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். மேலும் இந்த பூங்கா செப்டம்பர் 1995 ஆம் ஆண்டில் முறையாக ஒப்படைக்கப்பட்டது. இந்த திட்டம் 1997 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது, இதன் செலவு சுமார் ₹ 80 லட்சம் (2023 ஆம் ஆண்டில் ₹ 4.1 கோடி அல்லது 480,000 அமெரிக்க டாலருக்கு சமமாகும்). இந்த ஒப்பந்தம் அக்டோபர் 2000 ஆம் ஆண்டில் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. [2][3][1]

அம்சங்கள்

[தொகு]

இந்தத் தோட்டம் 10.16 ஏக்கர் (41,100 மீ 2 ) பரப்பளவில் அமைந்துள்ளது . இதில் நில வடிவமைப்பு மற்றும் புல்வெளிகள், ஏராளமான குழு இருக்கைகள், குழந்தைகள் விளையாடும் பகுதி, சிறிய குளம், நீரூற்றுகள் மற்றும் 855 மீட்டர் (2,805 அடி) நீளமுள்ள ஓட்டப்பயிற்சி பாதை ஆகியவை அமைந்துள்ளன. [3][2][1]

தெரு சந்தை

[தொகு]

இத்தோட்டச் சுவருக்கு வெளியேயும் அதை ஒட்டியும் உள்ள முறைசாரா சந்தை, உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்குப் பிரபலமான இடமாக அமைந்துள்ளது. காலையில், தோட்டத்தின் காலை நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்காக தெரு உணவுச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடைபாதைகளில், நாள் முழுவதும் ஆடைகள், நகைகள் மற்றும் கலைப்பொருட்களை விற்கும் கைவினைப் பொருட்கள் சந்தை செயல்பட்டு வருகின்றது. மாலையில், தோட்டத்தின் ஓரத்தில் உள்ள சாலை பலவிதமான உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை விற்கும் தெரு வியாபாரிகளால் நிரம்பி வழிகிறது.[2] உள்ளூரில் 'காவ் குல்லி' என்று அழைக்கப்படும் இந்த உணவுச் சந்தை, 2020 ஆம் ஆண்டில் 'மகிழ்ச்சியான தெருவாக' புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது . [4][5]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 Ray, C. N.; Sanghvi, Ajaykumar S. (January–March 2005). "Partnership for Development and Maintenance of Public Gardens: The Case of Ahmedabad". Nagarlok (in ஆங்கிலம்). Vol. XXXVII. Centre for Training and Research in Municipal Administration, Indian Institute of Public Administration. pp. 21–26. ISSN 0027-7584.
  2. 1 2 3 4 Ray, C. N. "6. Redevelopment of Street Vending of Law Garden in Ahmedabad". Urban Informal Sector, Urbanisation and Street Vendors in Gujarat. Lulu Publication. pp. 116–120. ISBN 978-1-387-21756-4.
  3. 1 2 3 4 "At CEPT Exhibition, spotlight on Law Garden of Ahmedabad, design partners". The Indian Express (in ஆங்கிலம்). 2022-09-13. Retrieved 2023-09-26.
  4. "Law Garden Khau Gully reborn as 'Happy Street'". The Times of India. 2020-02-08. Retrieved 2020-08-20.
  5. Highlites of Ahmedabad civic budget 2009-10
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டத்_தோட்டம்&oldid=4521032" இலிருந்து மீள்விக்கப்பட்டது