சடையப்ப வள்ளல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சடையப்ப வள்ளல் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, கம்பர் இவ்வாறுக் கூறுவார். "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." [சான்று தேவை]

சடையப்ப வள்ளலின் சொந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர். இவரின் சமாதி இன்றும் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் காணப்படுகிறது.கம்பராமாயணம் கம்பர் இயற்றிய உடன் கம்பர் வரும் போது அவருக்கு நெற்கதிர்வேய்ந்த பந்தலிட்டு இவர் வரவேற்பு அளித்ததால் அவ்வூருக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சடையப்ப_வள்ளல்&oldid=2716700" இருந்து மீள்விக்கப்பட்டது