சடாயு இயற்கைப் பூங்கா
| சடாயு இயற்கை பூங்கா | |
|---|---|
| சடாயு பூங்கா | |
| வகை | பூங்கா |
| அமைவிடம் | சடையமங்கலம், கொல்லம் மாவட்டம், இந்தியா |
| அண்மைய நகரம் | கொல்லம் 38 km (24 mi) |
| ஆள்கூறு | 8°51′57″N 76°52′02″E / 8.865888°N 76.867306°E |
| பரப்பளவு | 65 ஏக்கர்கள் (26.30 ha) |
| திறப்பு | நிலை-I[1] 5 டிசம்பர் 2017 நிலை-II[2] 17 ஆகத்து 2018 |
| வடிவமைப்பாளர் | இராசிவ் அஞ்சால் |
| இயக்குபவர் | சடாயுபுரம் சுற்றுல நிறுவனம் |
| நிலை | அனைத்து நாட்களிலும் |
| Budget | ₹100 கோடி (ஐஅ$12 மில்லியன்) |
| பொதுப் போக்குவரத்து | சடையமங்கலம், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை கொட்டாரக்கரை வர்க்கலை கொல்லம் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
| இணையதளம் | jatayuearthscenter |
சடாயு இயற்கை பூங்கா (Jatayu Earth's Center Nature Park) (சடாயு உலகத்தின் மையம் அல்லது சடாயு பாறை என்றும் அழைக்கப்படுகிறது) கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் சடையமங்கலத்தில் உள்ள ஒரு பூங்காவும், சுற்றுலா மையமுமாகும். இராமாயணத்தில் வரும் கழுகு வடிவான கதாப்பாத்திரமான சடாயுவின் சிற்பம் இங்கு உள்ளது. இது உலகின் மிகப் பெரிய பறவை சிற்பம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது.[3][4][5][6] 2019 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 61 மீட்டர்கள் (200 அடி) நீளம், 46 மீட்டர்கள் (151 அடி) அகலம், 21 மீட்டர்கள் (69 அடி) உயரம் மற்றும் 1,400 சதுர மீட்டர்கள் (15,000 sq ft) தரை பரப்பளவைக் கொண்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட பிறகு, ஆகஸ்ட் 17, 2018 அன்று பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்பட்டது.[7][8]
இந்த இடம் மலையாளத் திரைத்துறையில் பணிபுரியும் இராஜிவ் அஞ்சால் என்பவருக்குச் சொந்தமானது.[9][10]
இராமாயணம் என்ற இந்து மதக் காவியக் கதையில் கூறப்படும் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான சடாயுவின் சிற்பம் இது.[11][12] சடாயு விசுவாசத்தையும் பாதுகாப்பையும் குறிக்கிறது. இந்த சிற்பமும் பெண்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அணுகல்
[தொகு]இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 350 மீ (1,150 ) உயரத்தில் அமைந்துள்ளது. மேலே செல்ல, ஒரு கம்பிவட வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்து சிற்பத்தை பார்க்க ரூபாய் 555 -னை செலுத்த வேண்டும். தொகையாக பெறுவதில்லை ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம் மூலமாகவே செலுத்த வேண்டும். காலை 9.00 மணிக்கு அங்கிருந்தால் வெயிலுக்கு முன்னர் கீழே இறங்கிவிடலாம். அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் முன்னதாகவே செல்ல திட்டமிடுதல் அவசியம்
படம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kerala's First BOT Model Ecotourism Project, is Now Open for Public". Voyagers World. Retrieved 6 December 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kerala tourism to unveil world's largest bird sculpture". The Quint. 23 May 2018. Retrieved 25 May 2018.
- ↑ "Jatayu Nature Park Website". Archived from the original on 25 நவம்பர் 2015. Retrieved 1 December 2015.
- ↑ "Kerala park to welcome visitors in Jan - Khaleej Times". Retrieved 1 December 2015.
- ↑ "Adventure Rock Hill open for visitors". Times of India. Retrieved 6 December 2017.
- ↑ "Enjoy a day of adventure at Jatayu Earth's Center". Outlook Traveller. Retrieved 7 December 2017.
- ↑ "Adventure Rock Hill open for visitors". The Times of India. 6 December 2017. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/adventure-rock-hill-open-for-visitors/articleshow/61937068.cms.
- ↑ "Enjoy a day of adventure at Jatayu Earth's Center". Outlook Traveller. Retrieved 7 December 2017.
- ↑ "Jatayu Earth's Center Website". Retrieved 1 December 2015.
- ↑ "Kerala park to welcome visitors in Jan - Khaleej Times". Retrieved 1 December 2015.
- ↑ "Jatayupara at Chadayamangalam - Kerala Tourism". Retrieved 1 December 2015.
- ↑ "Lepakshi Temple - Lepakshi :: The Treasure House of Art and Sculpture". Archived from the original on 2012-03-28. Retrieved 2019-06-27.
