சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சஞ்சை மஞ்ச்ரேக்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுத் துடுப்பாட்டம் ஒ.நா
ஆட்டங்கள் 37 74
ஓட்டங்கள் 2043 1994
மட்டையாட்ட சராசரி 37.14 33.23
100கள்/50கள் 4/9 1/15
அதியுயர் ஓட்டம் 218 105
வீசிய பந்துகள் 2.5 1.2
வீழ்த்தல்கள் 0 1
பந்துவீச்சு சராசரி n/a 7.5
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/4 1/2
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
25/1 23/0
மூலம்: [1], டிசம்பர் 8 2005

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (Sanjay Manjrekar, संजय विजय मांजरेकर பிறப்பு: சூலை 12. 1965), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது குச்சக் காப்பாளராகவும் செயல்பட்டார். இந்திய அணிக்காக இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.தற்போது இவர் துடுப்பாட்ட வர்ணனையாளராக உள்ளார்.[1][2] இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 74 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1987–1997 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

1987 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 25, புது தில்லியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.

1987 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில்சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 25, புது தில்லியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 25  பந்துகளில் 5  ஓட்டங்கள் எடுத்து  பேட்டர்சனின்  பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[3] பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 63 பந்துகளில் 10 ஓட்டங்கள் எடுதிருந்த போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.

1996  ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத்  துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 20 இல், அகமதாபாத்தில்  நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு  எதிரான முதல்  தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார் இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 94  பந்துகளில் 34  ஓட்டங்கள் எடுத்து  ஆதம்சின்  பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 20 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுதிருந்த போது டொனாஅல்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1988 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் அரை நூறினைப்பதிவு செய்து இந்திய அணி வெற்றி பெற உதவினார்.[4] பின் 1989 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறினைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 218 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.[5] அதன் பின் இரண்டு ஆண்டுகளுக்கு இவரால் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரால் நூறு ஓட்டங்களை அடிக்க இயலவில்லை. பின் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 82 பந்துகளில் 105 ஓட்டங்கள் எடுத்தார்.[6]

1988  ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள்  துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சனவரி 5  இல், ராஜ்கோட்டில்   நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள்  அணிக்கு எதிரான முதல்  ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 19  பந்துகளில் 19  ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1996  ஆம் ஆண்டில் டைடன் கோப்பைத்தொடரில்  விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.நவம்பர் 6  இல், மும்பையில்   நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட  அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 31  பந்துகளில் 7  ஓட்டங்கள் எடுத்து ஏ பி டிவில்லியர்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]

சர்ச்சை:[தொகு]

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையின்போது மும்பை வீரர்களை அளவுக்கு அதிகமாகப் புகழ்வது விமர்சனத்துக்குள்ளானது. அது தவிர, ரவீந்திர ஜடேஜாவை 'பிட்ஸ் அண்ட் பீசஸ்' கிரிக்கெட் வீரர் என விமர்சித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிங்க் பால் டெஸ்ட் போட்டியின்போது, சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவையும் வம்புக்கு இழுத்தார். அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதால், பி.சி.சி.ஐ அவரை வர்ணனையாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது. 2020 ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக அந்த வர்ணனை குழுவில் தன்னையும் இணைக்குமாறு, பி.சி.சி.ஐ-யிடம் அவர் மன்றாடினார்.

சான்றுகள்[தொகு]

  1. "Player Profile: Sanjay Manjrekar". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 January 2013.
  2. "Sanjay Manjrekar's Mangalore origin". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30.
  3. "India v West Indies: West Indies in India 1987/88 (1st Test)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 16 January 2013.
  4. "India v New Zealand: New Zealand in India 1988/89 (4th ODI)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 16 January 2013.
  5. "Pakistan v India: India in Pakistan 1989/90 (3rd Test)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 16 January 2013.
  6. "India v South Africa: South Africa in India 1991/92 (3rd ODI)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 16 January 2013.
  7. "Final (D/N), Titan Cup at Mumbai, Nov 6 1996 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-30
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_மஞ்ச்ரேக்கர்&oldid=3729563" இலிருந்து மீள்விக்கப்பட்டது