உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சு சாம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சு சாம்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சஞ்சு விஸ்வநாத் சாம்சன்
பிறப்பு11 நவம்பர் 1994 (1994-11-11) (அகவை 29)[1]
புல்லுவிளை, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை எதிர்ச்சுழல்
பங்குஇலக்குக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 55)19 சூலை 2015 எ. சிம்பாப்வே
கடைசி இ20ப8 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–தற்போதுவரைகேரள துடுப்பாட்ட அணி (squad no. 9)
2012கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013–2015ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 8)
2016–2017டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 8)
2018–தற்போதுவரைராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 11)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ப20இ முதது பஅ இ20
ஆட்டங்கள் 7 55 95 171
ஓட்டங்கள் 83 3,162 2,445 4,032
மட்டையாட்ட சராசரி 11.85 37.64 30.56 26.9
100கள்/50கள் 0/0 10/12 1/14 3/25
அதியுயர் ஓட்டம் 23 211 212* 119
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/1 73/7 99/12 86/14
மூலம்: Cricinfo, 8 திசம்பர் 2020

சஞ்சு விஸ்வநாத் சாம்சன் (Sanju Viswanath Samson (பிறப்பு: நவம்பர் 11, 1994) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். இவர் சூலை 19, 2015 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ரஞ்சிக் கோப்பைத் தொடரில் மிக இளம்வயதில் தலைவர் ஆனவர் எனும் சாதனையைப் படைத்தார்.[2] மேலும் மிக இளம் வயதில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் 1000 ஓட்டங்களை அடித்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.

இவர் திருவனந்தபுரம், கேரளத்தில் வளார்ந்தார். உள்ளூர்ப் போட்டிகளில் கேரள மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் மிக இளம் வயதில் 50 ஓட்டங்களை அடித்தவர் எனும் சாதனையைப் படைத்தார். ஏப்ரல் 29, 2013 ஆம் ஆண்டில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது 18 ஆவது வயதில் விளையாடி இந்தச் சாதனையைப் படைத்தார்.[3][4] 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெஸ்ட் யெங் பிளேயர் அவார்டு (சிறந்த இளாம் வீரர்) எனும் பிரிவில் இவரை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். 2013 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இந்திய அணியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5][6] 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் ச்ய்து விளையாடிய இந்திய அணியில் இவர் இடம்பெற்றார்.[7]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சஞ்சு சாம்சன் நவம்பர் 11, 1994 இல் திருவனந்தபுரம், கேரளத்தில் மீனவர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சாம்சன் விஸ்வநாத், தாய் லிஜி. இவரின் தந்தை புது தில்லியில் பணியாற்றிய முன்னாள் காவல் அதிகாரி ஆவார். [8]

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2012 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் அணியில் இடம்பெறவில்லை. 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இவர் இடம்பெற்றார்.[9] ஏப்ரல் 13, 2013 இல் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்த அணியின் குச்சக் காப்பாளர் திஷன்ட் யாக்னிக் காயம் காரணமாக விளையாடாததால் இவருக்கு குச்சக் காப்பாளராக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜேம்சு பால்க்னர் வீசிய பந்தில் ராஜகோபால்சதீச் அடித்த பந்தை கேட்ச் பிடித்து வீழ்த்தினார். மேலும் பிரவீன் குமாரை ரன் அவுட் ஆக்கினார். இவர் அஜின்க்யா ரகானேவுடன் இணைந்து 47 ஓட்டங்கள் எடுத்தார். இவர் 23 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. கேரள மட்டையாளர் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மத்திய துடுப்பாட்டக்காரர்களின் நிலையில்லாத ஆட்டத் திறனை நிறைவு செய்யும் விதமாக இவர் செயல்படலாம் என தி இந்து இதழ் தெரிவித்தது. நான் இவரின் ஆட்டத்தை முதன்முதலாகப் பார்க்கிறேன். கேரளாவில் இருந்து வந்த மட்டையாளர் சிறப்பாக விளையாடுகிறார் என ஹர்சா போக்ளே தெரிவித்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "From Virat Kohli to David Miller, cricketers wish Sanju Samson happy birthday". dnaindia. பார்க்கப்பட்ட நாள் 11 November 2020.
  2. "India tour of Zimbabwe, 2nd T20I: Zimbabwe v India at Harare, Jul 19, 2015". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
  3. "IPL Stats: Sanju Samson youngest player to score an IPL fifty". sports.ndtv.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-05-19.
  4. "Royals keep home streak going with comfortable win". espncricinfo.com.
  5. "Zol to captain India U-19s in Australia tri-series". espncricinfo.com. 15 Jun 2013. பார்க்கப்பட்ட நாள் 17 June 2013.
  6. "Vijay Zol to lead India juniors in Australia". sports.ndtv.com. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2018-05-19.
  7. "Yuvraj Singh excluded from India's for ODIs against England, Sanju Samson, Karn Sharma selected". Daily News and Analysis. 5 August 2014. பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.
  8. Cricket Profiles 2013
  9. "IPL-6: Rajasthan Royals signs up state boy Sanju Samson". Deccan Cheonicle. Archived from the original on 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2018-05-19.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சு_சாம்சன்&oldid=3979105" இலிருந்து மீள்விக்கப்பட்டது