சஞ்சீவ் பட்
சஞ்சீவ் பட் | |
---|---|
resigned | |
பிறந்த நாள்: 21 திசம்பர் 1963 | |
பிறந்தயிடம் | மும்பை, இந்தியா |
Allegiance | இந்தியக் காவல் பணி |
பணிபுரிந்த பிரிவு | இந்தியா |
Alma mater | இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை |
சஞ்சீவ் பட் (Sanjiv Bhatt) என்பவர் குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரியாவார்.[1] இவர் 2002 இல் குஜராத் வன்முறையின் போது அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததற்காக அறியப்படுகிறார்.[2] 2015 ஆம் ஆண்டு தகவல் அளிக்காமல் விடுப்பு எடுத்ததாகக் கூறி இந்திய உள்துறை அமைச்சகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
நரன் ஜாதவ் வழக்கு
[தொகு]1994 ஆம் ஆண்டு போர்பந்தரில் பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்கும் விதமாக, சட்டத்துக்குப் புறம்பாக ஆயுதங்கள் இறக்குமதி செய்து பயன்படுத்திய வழக்கில் 22 நபர்மீது குற்றம் சுமத்தி, தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அப்போதைய போர்பந்தர் காவல்துறை கண்காணிப்பாளாராக சஞ்சீவ் பட் இருந்தார். குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கும் பொருட்டு 1997 ஆம் ஆண்டு விசாரணைக் கைதியின் அந்தரங்க உறுப்புகளில் மின் அதிர்வு பாய்ச்சி துன்புறுத்தியதாக, பாதிக்கப்பட்ட ஜாதவ் புகாரளித்தார். இதனால் இவர்மீது 1998 ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது. போதிய ஆதாரமில்லாததால் 2024 ஆம் ஆண்டு போர்பந்தர் நீதிமன்றம் இவரை விடுவித்தது.[3]
சுமா்சிங் ராஜ் புரோஹித்
[தொகு]இவர் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பனாஸ்கந்தா மாவட்ட பாலன்பூா் பகுதியில் 1996 ஆம் ஆண்டு தங்கும் விடுதியில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ராஜஸ்தானைச் சோ்ந்த வழக்குரைஞா் சுமா்சிங் ராஜ் புரோஹித் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். ராஜஸ்தானில் பிரச்னைக்குரிய ஒரு நிலத்தைச் சட்டவிரோதமாக மாற்றக் கோரிய விவகாரத்தில் வழக்குரைஞா் சுமா்சிங் ராஜ் புரோஹித் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. பாலன்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், வழக்குரைஞா் மீது சஞ்சீவ் பட் பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானது. இவ்வழக்கில் சஞ்சீவ் பட்டுக்கு இருபதாண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது.[4]
காவல்நிலைய மரண வழக்கு
[தொகு]1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி தலைமையேற்று நடத்திய ரத யாத்திரையையின் போது பொது வேலைநிறுத்தமும் கலவரமும் நடைபெற்றுள்ளது. அப்போது சிறுபான்மையினருக்குச் சொந்தமான சொத்துகளைச் சேதப்படுத்தியதாக 133 நபர்கள் மீது தடா சட்ட வழக்கு பதிந்து காவல்துறையினர் கைது செய்தனர். இவர் ஜாம்நகரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இக்காலக்கட்டத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது காவலின் போது பிரபுதாஸ் வைஸ்னானி என்கிற நபர் சித்ரவதை செய்யப்பட்டதால் நவம்பர் 18 ல் தேதி மரணம் அடைந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக குஜராத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த காவல்நிலைய மரணம் வழக்கில், இவருக்கு 2019 இல் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.[5][6]
2002 பணிமாறுதல்
[தொகு]1999 டிசம்பர் முதல் செப்டம்பர் 2002 வரை மாநில உளவுப்பிரிவின் துணைக் கண்காணிப்பாளராக காந்திநகரில் பணிபுரிந்து வந்தார். உள்நாட்டுப் பாதுகாப்பு முதல் முதலமைச்சர் பாதுகாப்பு வரை இவரின் பொறுப்பாக இருந்தது.[7] கோத்ரா தொடருந்து எரிப்பு நிகழ்வும் அதனைத் தொடர்ந்த குஜராத் வன்முறையின் போதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 2002 செப்டம்பர் 9 ஆம் நாள் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்கள் தொகை வளார்ச்சியை விமர்சித்துப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான அறிக்கையை சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் மாநில அரசிடம் கேட்டது.[8] எந்தவித ஆவணங்களும் இல்லை என்று அப்போதைய தலைமைச் செயலாளர் பி.கே.பிஸ்ரா அறிக்கை அனுப்பவில்லை.[9] ஆனால் உளவுத்துறையினர் தாங்கள் பதிவு செய்திருந்த பேச்சுச்சுருக்கத்தை அந்த ஆணையத்திற்கு அனுப்பினர். இதன் காரணமாக இவர், ஆர்.பி. ஸ்ரீகுமார், ஈ.இராதாகிருஷ்ணன் உட்பட உயரதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டனர். மாநில காவல் பயிற்சிக் கல்லூரிக்கு முதல்வராக சஞ்சீவ் பட் மாற்றப்பட்டார்.[8]
ஒன்பதாண்டுகள் கழித்து 2011 ஏப்ரல் 14 இல் உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்தார். அதில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த வேண்டாம், அவர்கள் போக்கில் விட வேண்டுமென்று குஜராத் காவல்துறை உயரதிகாரிகளின் கூட்டமொன்றில் மோடி சொன்னதாகக் சஞ்சீவ் பட் கூறினார்.[10][11] அவ்வாறு சஞ்சீவ் பட் கலந்து கொண்ட கூட்டமே நடைபெற வில்லை என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்தது.[12] அதனால் உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு மீதும் விமர்சனத்தை முன்வைத்தார்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Former IPS officer Sanjiv Bhatt sentenced to life in 30-year-old custodial death case". The Economic Times. 20 June 2019. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/former-ips-officer-sanjeev-bhatt-sentenced-to-life-in-30-year-old-custodial-death-case/articleshow/69871053.cms?from=mdr.
- ↑ "Sanjiv Bhatt did not attend Narendra Modi's Feb 2002 meeting, says SIT". Economic Times. PTI. 29 April 2013. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sanjiv-bhatt-did-not-attend-narendra-modis-feb-2002-meeting-says-sit/articleshow/19787775.cms.
- ↑ "போலீஸ் காவலில் இருந்த நபர் சித்திரவதை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விடுவிப்பு!". தினமணி. https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Dec/08/gujarat-court-acquits-former-ips-officer-sanjiv-bhatt-released. பார்த்த நாள்: 25 May 2025.
- ↑ "Former IPS officer Sanjiv Bhatt convicted for 20 years in 1996 drug seizure case Read more At: https://www.aninews.in/news/national/general-news/former-ips-officer-sanjiv-bhatt-convicted-for-20-years-in-1996-drug-seizure-case20240328222607/". ஏ.என்.ஐ. https://www.aninews.in/news/national/general-news/former-ips-officer-sanjiv-bhatt-convicted-for-20-years-in-1996-drug-seizure-case20240328222607/. பார்த்த நாள்: 25 May 2025.
- ↑ "மோடியை விமர்சித்தவர்... ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை கிடைத்த பின்னணி!". விகடன். https://www.vikatan.com/government-and-politics/160136-life-sentence-for-former-ips-officer-sanjiv-bhatt. பார்த்த நாள்: 25 May 2025.
- ↑ "IPS Sanjiv Bhatt charged with murder". The Times of India. 9 November 2012. http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/IPS-Sanjiv-Bhatt-charged-with-murder/articleshow/17150821.cms.
- ↑ "Sanjiv Bhatt: the man who took on Narendra Modi". IBN Live. 22 April 2011. https://www.news18.com/news/india/sanjiv-bhatt-the-man-who-took-on-narendra-modi-366957.html.
- ↑ 8.0 8.1 "Gujarat IB officers transferred for putting Modi's controversial speech on record". rediff.com. 18 September 2002. http://www.rediff.com/news/2002/sep/18guj2.htm.
- ↑ "Should We Run Relief Camps? Open Child Producing Centres?". Outlook. 30 September 2002. https://www.outlookindia.com/website/story/should-we-run-relief-camps-open-child-producing-centres/217398.
- ↑ Mahesh Langa (19 August 2015). "Gujarat IPS officer who took on Modi after 2002 riots sacked". The Hindu. http://www.thehindu.com/news/national/sanjiv-bhatt-dismissed-from-ips/article7558253.ece.
- ↑ "Sanjiv Bhatt seeks access to state IB records again". Ahmedabad: Hindustan Times. 4 January 2012 இம் மூலத்தில் இருந்து 4 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120104214219/http://www.hindustantimes.com/India-news/Ahmedabad/Sanjiv-Bhatt-seeks-access-to-state-IB-records-again/Article1-791275.aspx.
- ↑ "Sanjiv Bhatt did not attend Narendra Modi's Feb 2002 meeting, says SIT". Economic Times. PTI. 29 April 2013. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sanjiv-bhatt-did-not-attend-narendra-modis-feb-2002-meeting-says-sit/articleshow/19787775.cms.
- ↑ "Is Sanjiv Bhatt paying the price for testifying against PM Modi in 2002 riots?". nationalheraldindia. https://www.nationalheraldindia.com/india/is-sanjiv-bhatt-paying-the-price-for-testifying-against-pm-modi. பார்த்த நாள்: 25 May 2025.